திருவண்ணாமலையிலிருந்து திருப்பரங்குன்றம் வந்த பாரம்பரிய தீப மிராசுதாரர் குழு!

திருவண்ணாமலையிலிருந்து திருப்பரங்குன்றம் வந்த பாரம்பரிய தீப மிராசுதாரர் குழு தீபம் ஏற்றுவதற்கான பணிகளை செய்து வருகின்றனர்.

தீப மிராசுதாரர் குழு வருகை

தீப மிராசுதாரர் குழு வருகை - dps

Updated On :

திருவண்ணாமலையிலிருந்து வருகை தந்துள்ள 6 பேர் கொண்ட பாரம்பரிய தீப மிராசுதாரர்கள் குழுவினர், மண்கலயங்களை வைத்து காடா துணிகளைக் கொண்டு திரிகளைத் தயாரித்துப் பொருத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சி தூணில் தீபமேற்ற மேடை தயார் செய்யப்பட்டுள்ளது, ஓய்வுபெற்ற நீதிபதிகள், தொல்லியல் துறையினர் மலைக்குப் புறப்பட்டனர்.

​திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான மேடை அமைக்கும் பணிகள் நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது.

​இதன் ஒரு பகுதியாக, தீபத்தூணைச் சுற்றிலும் மரங்களால் சாரம் கட்டப்பட்டு, அதன் மேல் நின்று விளக்கேற்றுவதற்கு ஏதுவாகப் பலகைகள் அடிக்கப்பட்டு தீப மேடை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தீபம் ஏற்றுவதற்குத் தேவையான 30 கிலோ நெய், திரி தயாரிப்பதற்கான 50 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் மற்றும் மண்பானைகள் ஆகியவை மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

திருவண்ணாமலையிலிருந்து வருகை தந்துள்ள 6 பேர் கொண்ட பாரம்பரிய தீப மிராசுதாரர்கள் குழுவினர், மண்கலயங்களை வைத்து காடா துணிகளைக் கொண்டு திரிகளைத் தயாரித்துப் பொருத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

​இந்நிலையில், சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் தொல்லியல் துறை அதிகாரி அறவாழி தலைமையிலான குழுவினரும், கோயிலின் நான்கு ஸ்தானிக பட்டர்களும் மலை உச்சிக்குச் சென்றனர்.

அவர்களைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகிய இருவரும் மலை மேல் சென்று அங்கு நடைபெற்று வரும் தீபமேற்றும் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்கிறார்கள்.

Summary

A group of traditional 'Deepa Mirasudars' (hereditary lamp-lighters) has arrived in Tirupparankundram from Tiruvannamalai!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.