திருப்பரங்குன்றம் தூண் பகுதியில் எவ்வாறு ஏற்றப்படவிருக்கிறது தீபம்?தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்நேற்று அரோகரா என தமிழில் பதிவு! இன்று படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி! பின்னணி என்ன?திருப்பரங்குன்றம் தூணில் தீபம்! வழிகாட்டுதல் குழுவில் ஆட்சியர்!திருப்பரங்குன்றத்தில் மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்படும்! நீதிபதிகள் அறிவிப்புதிடீரென அரோகரா என தமிழில் பதிவு! இன்று படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி! பின்னணி என்ன?தீபத்தூண் பகுதியில் இன்று யாருக்கும் அனுமதி இல்லை; நாளை வாருங்கள்! சிஆர்பிஎஃப் அதிகாரி வேண்டுகோள்பெரியார் அறிவுலக வழக்கு: அகல் விளக்கு உரிமையாளரை விசாரிக்க 3 நாள் போலீஸ் காவல்!தொகுதி மறுவரையறை மசோதா: கோரிக்கைகளை ஏற்றதால் திமுக ஆதரவு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புதிருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம்! கொப்பரை வைத்து ஏற்ற திட்டம்!அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்வு: தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு!நிதியின்றி தவிக்கும் போக்குவரத்துக் கழகம்! டயர்கள் இல்லாததால் முடங்கிய பேருந்துகள்: அன்புமணி குற்றச்சாட்டுமகளிர் செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு முதல்வர் வாழ்த்து!திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரம்!திருப்பரங்குன்றம்: பல்வேறு பகுதிகளிலிருந்தும் முருக பக்தர்கள் வருகை!தவெக ஆட்சியில் மூலதனச் செலவினம் 11% சரிவு! தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

திருப்பரங்குன்றம் தூண் பகுதியில் எவ்வாறு ஏற்றப்படவிருக்கிறது தீபம்?

திருப்பரங்குன்றம் தூண் பகுதியில் எவ்வாறு ஏற்றப்படவிருக்கிறது தீபம் என்பது பற்றி...

தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடு

தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடு

Updated On :

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூண் பகுதியில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளன. ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்ளிட்ட வழிகாட்டுதல் குழுவினர் மலைக்குப் புறப்பட்டு சென்றுள்ளனர்.

மலை மீதிருந்து வெளியாகும் காட்சிகள், மலையில் உள்ள தூணில் ஒரு பெரிய விளக்கு வைக்கப்பட்டு அதனையும் சேர்த்து எண்ணெயில் நனைந்த திரி முழுக்க தூணை மறைத்தபடி சுற்றி வைக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கில் நெய் ஊற்றப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தற்போது தூணில் மேலும் ஒரு அகல் விளக்கை வைத்து, தூணைச் சுற்றியிருக்கும் திரிகள், அகல் விளக்குக்குள் வைத்து சூடங்கள் கொண்டு தீபம் ஏற்றப்படலாம் என்று தெரிகிறது.

இப்போது தூண் முழுக்க நெய்யில் நனைந்த திரி இருக்கும் நிலையில், எங்கு தீபம் ஏற்றப்படும், தூண் மேல் பக்கத்தில் தீபம் ஏற்றப்படுமா? தூணைச் சுற்றிலும் இருக்கும் திரி பகுதி எரியத் தொடங்கினால், அருகில் உள்ள கம்புகளால் கட்டப்பட்ட மேடையும் எரிந்து விடும் ஆபத்து இருக்கிறதா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் மகா தீபம் ஏற்றுவதற்காக, தலா 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 மண்சட்டிகள் மலைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

​திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

​இதன் ஒரு பகுதியாக, தீபம் ஏற்றுவதற்காகத் தலா 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட 3 புதிய மண் சட்டி போன்றவை கொண்டு செல்லப்பட்டன முன்னதாக, கோயில் அலுவலகத்தில் இந்த மண்சட்டிகள் மற்றும் தீபம் ஏற்றத் தேவையான கற்பூரம் உள்ளிட்ட பூஜைப் பொருள்களை வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

​தொடர்ந்து, சிறப்பு பூஜை செய்யப்பட்ட மண்சட்டிகள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக மலை உச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டன.

​மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் பாதுகாப்பாகத் தீபம் ஏற்றுவதற்கு ஏதுவாக, அங்கு சாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மேல் பச்சைக் களிமண் பூசப்பட்டு, அதன் மீது இந்த மண்சட்டிகளை நிலைநிறுத்தி, நெய் ஊற்றி மகா தீபம் ஏற்றப்பட உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Summary

How is the *deepam* (lamp) going to be hoisted onto the pillar section at Tirupparankundram?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.