திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற மலைக்குப் புறப்பட்ட வழிகாட்டுதல் குழு!
திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற மலைக்குச் செல்லும் வழிகாட்டுதல் குழு

மலைக்குச் செல்லும் வழிகாட்டுதல் குழு
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றுவதற்காக, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் உள்ளிட்ட வழிகாட்டுதல் குழு மலைக்குப் புறப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை உச்சியில் உள்ள தூணில் இன்று மாலை கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில், திருக்கோயில் நிர்வாகப் பணிகளை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
வழிகாட்டுதல் குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவர், மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், சிஆர்பிஎஃப் ஐ.ஜி., ஸ்தானீக பட்டார்கள் 2 பேர் இணைக்கப்பட்டுள்ளனர்.
மாலை 5 மணிக்கு திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படவிருக்கிறது. அதற்காக தூண் பகுதியில் மேடை அமைக்கப்பட்டு கொப்பரை வைத்து தீபம் ஏற்ற அனைத்து நடவடிக்கைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தக் குழுவினர் மலைக்கு மேல் சென்றதும் தீபம் ஏற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.
தீபம் ஏற்றும் குழுவினருடன் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவும் மலைக்குச் செல்கிறார். ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவரும் மலைப் படிகள் வழியாக மலை மீது சென்று கொண்டிருக்கிறார்கள்.
Summary
Protest demanding the withdrawal of the police from the Tirupparankundram hill!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


