‘அகல்விளக்கு’ பதிப்பக உரிமையாளரை 3 நாள்கள் காவலில் விசாரிக்க அனுமதி: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
‘அகல் விளக்கு’ பதிப்பக உரிமையாளா் மோகனை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஊழல் தடுப்புத் துறைக்கு அனுமதி அளித்து சென்னை ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் - கோப்புப் படம்
‘அகல் விளக்கு’ பதிப்பக உரிமையாளா் மோகனை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஊழல் தடுப்புத் துறைக்கு அனுமதி அளித்து சென்னை ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை பெரியாா் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடா்பார வழக்குப் பதிவு செய்த ஊழல் தடுப்புப் பிரிவினா், நூலகங்களுக்கு ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) மூலம் தயாரிக்கப்பட்ட புத்தகங்களை விநியோகம் செய்த அகல் விளக்கு பதிப்பக உரிமையாளா் மோகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
நூலகங்களுக்கு புத்தகங்களை விநியோகித்த அகல் விளக்கு பதிப்பகத்துக்கு அரசுத் தரப்பில் ரூ.1.74 கோடி வழங்கியிருந்த நிலையில், அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்கை ஊழல் தடுப்புத் துறை முடக்கியுள்ளது. இந்நிலையில், மோகனை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில், ஊழல் தடுப்புத் துறை மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ்.சத்தியமூா்த்தி முன் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மோகன் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். இதையடுத்து மோகனை நவ. 28-ஆம் தேதி பகல் 12 மணியிலிருந்து, நவ. 30-ஆம் தேதி மாலை 4 மணி வரை 3 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டாா்.
மேலும், விசாரணையின்போது மோகனை துன்புறுத்தக் கூடாது எனவும், அவரது தரப்பு வழக்குரைஞா் ஒருவரை, விசாரணையை பாதிக்காத தொலைவில் இருக்க அனுமதிக்கவும் நீதிபதி உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

