இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் மலையில் ஏற்றப்பட்ட தீபம்! பட்டாசு வெடித்து உற்சாகக் கொண்டாட்டம்!!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்நேற்று அரோகரா என தமிழில் பதிவு! இன்று படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி! பின்னணி என்ன?

வானிலை: 7 மாவட்டங்களில் இரவு 10 மணிவரை மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இரவு 10 மணி வரையிலான வானிலை முன்னறிவிப்பு பற்றி...

Rain likely in 7 districts until 10 PM!

கோப்புப்படம்

Updated On :

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று (நவ. 28) இரவு 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, விருதுநகர், தென்காசி, தேனி, திருவாரூர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் மேலும் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஏழு நாள்களுக்கு பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதியில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது.

இதில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலத்தில் 81.2 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது.

ஏனைய பகுதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை. மதுரை விமான நிலையத்தில் அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சமவெளிப் பகுதிகளில் குறைந்தபட்சமாக கரூர் பரமத்தியில் 22 டிகிரி செல்சியஸும், மலைப்பகுதிகளில் கொடைக்கானலில் 11.8 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Rain is likely in 7 districts of Tamil Nadu until 10 PM today (Nov. 28).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.