மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க திமுக எம்.பி.க்கள் அவரது இல்லத்திற்குச் சென்றுள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா - ANI
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க திமுக எம்.பி.க்கள் அவரது இல்லத்திற்குச் சென்றுள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவை சிறப்புக் கூட்டத்தொடர் நவ. 30 அன்று தொடங்கப்படவுள்ளது. இதில், அரசியலமைப்பு (132-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை (இரண்டாவது) மசோதா 2026 மற்றும் யூனியன் பிரதேச சட்டங்களுக்கான திருத்த மசோதா என 3 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
தொகுதி மறுவரையறை குறித்த திமுகவின் இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாக புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளதால் மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்திக்க திமுக எம்.பி.க்கள் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, டி.ஆர். பாலு, ஆ.ராசா உள்ளிட்ட எம்.பி.க்கள் குழு அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்திக்கின்றனர்.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்த பின்னர் இந்தச் சந்திப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Summary
DMK MPs meet with Home Minister Amit Shah!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


