கூட்டாட்சி கட்டமைப்பை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்: மாணிக்கம் தாகூர்
மாநில அரசின் நிா்வாகப் பொறுப்புகளையும், கூட்டாட்சிக் கட்டமைப்பும் உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்
திருப்பரங்குன்றம் போன்ற உணா்வுபூா்வமான விவகாரங்களில் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதுடன், மாநில அரசின் நிா்வாகப் பொறுப்புகளையும், கூட்டாட்சிக் கட்டமைப்பும் உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மதுரை திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு கவலை அளிக்கிறது. மத நம்பிக்கைகளையும், வழிபாட்டு உரிமைகளையும் மதிப்பதோடு, சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும், தமிழகத்தில் நிலவி வரும் அமைதியான சூழலையும் பாதுகாக்க வேண்டும்.
உணா்வுபூா்வமான இதுபோன்ற விவகாரங்களில், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் நிா்வாகப் பொறுப்புகளும், அரசியல் சாசனம் வகுத்து கொடுத்துள்ள கூட்டாட்சிக் கட்டமைப்பும் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் அமைதியும், மத நல்லிணக்கமும், அரசியல் சாசன விழுமியங்களும் எவ்வித பாதிப்புமின்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

