பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

தொகுதி மறுவரையறை பிரச்னையில் திமுக எடுத்தது சாதுரியமான முடிவு: பண்ருட்டி ராமச்சந்திரன்

தொகுதி மறுவரையறை பிரச்னையில் திமுக எடுத்துள்ள இந்த முடிவு சாதுரியமான முடிவு என பண்ருட்டி ராமச்சந்திரன் பாராட்டியிருப்பது குறித்து...

The DMK made a shrewd decision regarding the issue of constituency delimitation

மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன் - DNS

Updated On :

சேலம்: தொகுதி மறுவரையறை பிரச்னையில் திமுக எடுத்துள்ள இந்த முடிவு சாதுரியமான முடிவு எனப் பாராட்டியுள்ள மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன், விஜய்யின் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிட்டது என தெரிவித்தார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு நாளை(நவ.30) தொடங்க உள்ள சிறப்புக் கூட்டத்தொடரில் கொண்டுவரவுள்ள தொகுதி மறுவரையறை திருத்தச் சட்ட மசோதாவுக்கு திமுக ஆதரவளிக்க முடிவு செய்துள்ள நிலையில், தமிழக அரசியலில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரன் பாராட்டியுள்ளார்.

சேலம், அரியலூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த திருமண விழாவில் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன். இன்றைய அரசியல் சூழ்நிலை குறித்து கருத்து தெரிவிக்க விரும்புகிறேன். எனது கருத்துகள் எந்த கட்சியையும் ஆதரித்தோ, எதிர்த்தோ அல்ல.

இன்றைய அரசியல் சூழ்நிலை தமிழ்நாட்டிலும் சரி, இந்தியாவிலும் சரி ஒரு குழப்பமான நிலை எய்துள்ளது என கருதுகிறேன். தமிழ்நாட்டில் பல பிரச்னைகள் உள்ளது. அரசியல் கட்சியினர் அவரவர் போக்கில் செயல்படுகிறார்கள். இந்தியாவிலே தில்லியில் இருக்கும் அரசு மிகவும் கவலை தரும் நிலையில் தான் உள்ளது. நான் அரசியலுக்கு வந்து 70 ஆண்டுகள் ஆகிறது. எனது அனுபத்தில் தற்போதைய அரசியல் நிலைகளை பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது.

அமைதியான அரசியலுக்கு சம வாய்ப்பு முக்கியம்

ஒரு சிலர் தாங்கள் புறக்கணிக்கப்படுகிறோம் என எண்ணுகிறபோது அந்த அரசியல் தாறுமாறுகிவிடுகிறது. உலகம் முழுவதும் இதுதான் நிலை.

அமெரிக்காவில் டிரம்ப் அரசியலில் சம வாய்ப்பு தர வேண்டும் என்று மற்ற மக்களை எல்லாம் வெளியேற்றப்படுகிறார்கள், கஷ்டப்படுகிறார்கள். ஆனால், தற்போது அங்கு நிலமை வேறாக உள்ளது. அமைதியான அரசியலுக்கு சம வாய்ப்பு என்பது முக்கியம். சம வாய்ப்புக்காக இனப்படுகொலைக்கு ஆளாகுவது உலகிலே தமிழினம் தான். படிப்பில் ஆகட்டும், வேலை வாய்ப்புகள் ஆகட்டும். அனைத்திலும் சம வாய்ப்பு இருக்க வேண்டும்.

இலங்கையில் சம வாய்ப்பு இல்லாததால் தான் போராடினார்கள். ஆனால், அதே இலங்கை சீரழிந்து விட்டது. புரட்சி வெடுத்தது. திவால் ஆகிவிட்டது. இதனால்தான் சம வாய்ப்பு தர வேண்டும். இலங்கையில் என்ன நடந்ததோ அது தற்போது இங்கும் நடந்து வருகிறது.

ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மொழி என பேசி வருகிறார்கள். இந்தியாவில் இருக்கும் 20 கோடி முஸ்லிம்கள் எங்கு செல்வார்கள். நாட்டு மக்களின் எதிர்கால நம்பிக்கையை நிர்ணயிக்க வேண்டும்.

இதனால்தான் சம வாய்ப்பு தர வேண்டும். இலங்கையில் என்ன நடந்ததோ அது தற்போது இங்கும் நடந்து வருகிறது.

சரித்திரம் திரும்பி வருகிறதா?

1965 இல் திருப்புமுனை ஏற்பட்டது. இப்போது அதுபோல சரித்திரம் திரும்பி வருகிறதா என எண்ணுகிறேன் என்றார்.

சாதுரியமான முடிவு

மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுக தற்போது எடுத்துள்ள நிலைபாடு குறித்து கேட்டதற்கு, சாதுரியமான முடிவு எடுத்திருக்கிறார்கள்.

1980 இல் கலைஞர் என்ன செய்தாரோ, இப்போது ஸ்டாலினும் அதை செய்திருக்கிறார். இது நல்ல முடிவு தான் என பாராட்டினார்.

முதல்வர் விஜய் குறித்த கேள்விக்கு, விஜய் நல்லது செய்வார் என நினைத்தும், இரண்டு கட்சியை பார்த்து விட்டோம். விஜய்க்கு ஓட்டு போடலாம் என கருதி தான் ஓட்டு மக்கள் ஓட்டு போட்டார்கள். மக்கள்தான் எஜமானர்கள். தற்போது விஜய் ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு ஒன்றும் தெரியாது என நினைக்க வேண்டாம் என அவர் கூறினார்.

The DMK made a shrewd decision regarding the issue of constituency delimitation: Panruti Ramachandran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.