
சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை!
சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி அடையாறு மணிமண்டபத்தில் உள்ள அவரின் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியதை...

சிவாஜி கணேசன் படத்திற்கு மரியாதை செலுத்தும் அமைச்சர்கள் - எக்ஸ்
சிவாஜி கணேசனின் பிறந்தநாளையொட்டி சென்னை அடையாறு மணிமண்டபத்தில் உள்ள அவரின் சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியதை செலுத்தப்பட்டது.
தமிழக அரசு சார்பில் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர்கள் ராஜ்மோகன், வெங்கடரமணன் ஆகியோர் சிவாஜி கணேசன் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதுமட்டுமின்றி, இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான வன்னி அரசு, நடிகர் பிரபு, நடிகர் நாசர், விக்ரம் பிரபு மற்றும் சிவாஜி கணேசன் குடும்பத்தினர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் ஜே.சி.டி. பிரபாகர் பேசியது குறித்து:
''சிவாஜி கணேசன் குழந்தை மனம் கொண்டவர் என்பதை அவர்களோடு பழகிய நாங்கள் அறிவோம். புரட்சித் தலைவர் மறைவுக்குப் பிறகு அவரின் துணைவியார் ஜானகி கட்சியை நடத்தியபோது, வெற்றி - தோல்வி குறித்து கவலைப்படாமல் அரசியலில் நின்றார். தன்னலம் கருதாமல் அவரை உள்ளத்தில் வைத்திருக்கும் அவரின் மன்றத்தாருக்கு நன்றி'' எனக் குறிப்பிட்டார்.
Summary
Sivaji Ganesan's Birthday: Tribute Paid on Behalf of the Tamil Nadu Government
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






