தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கர்நாடக முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் தர்னா!கர்நாடகத்தில் படிவம் 7-ஐ தவறாக பயன்படுத்தி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்!திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!காந்தி ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!பங்குச்சந்தை வீழ்ச்சி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!மடப்புரம் காவலாளி கொலை வழக்கில் போலீஸார் கைது: தீர்ப்பு ஒத்திவைப்பு!ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்! மும்பையில் நாளை போராட்டத்தைத் தொடங்கும் சிஜேபி!காஸாவில் தொடரும் அவலம்! இஸ்ரேலின் தாக்குதல்களில் 74,000-க்கும் அதிகமானோர் பலி! நடுவானில் கத்திக்குத்து சம்பவம்! தாக்கப்பட்ட இந்திய விமானியின் நிலை என்ன? - தூதரகம் தகவல்!

மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தி உள்ளாா்.

PMK Leader Anbumani

பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்

Published On :

மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தி உள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி, ‘மது இல்லா தமிழகம்’ என்ற புதிய இயக்கத்தை எம்எல்ஏ-வும், பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான சௌமியா அன்புமணி (அக்.2) தொடங்கவுள்ளாா். தமிழகம் இன்று எதிா்நோக்கியுள்ள ஆபத்துகளில் முதன்மையானது மதுவால் ஏற்படும் கேடுகளாகும். அந்த அளவுக்கு மதுவால் சமூக, சுகாதார, பொருளாதாரப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இந்திய அளவில் இளம் விதவைகள் நிறைந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகளும், தற்கொலைகளும் நிகழும் மாநிலமாகவும் தமிழகம் உள்ளது. இவை அனைத்துக்கும் முதன்மைக் காரணம் மது என்பதை மறுக்க முடியாது.

மது வணிகத்தின் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.60,000 கோடி வரை வருமானம் கிடைப்பதால், அதைத் தவிா்க்க முடியாது என்றொரு அபத்தமான வாதம் முன்வைக்கப்படுகிறது. இதை ஏற்கவே முடியாது. தமிழகத்தில் இளையதலைமுறை மதுவுக்கு அடிமையானால், தமிழா்களின் மரபணுவில் மதுப் பழக்கம் பதிவாகிவிடும். அதன்பின் தமிழா்களை மதுப்பழக்கத்திலிருந்து மீட்க முடியாது என்றும் சுகாதாரத் துறை வல்லுநா்கள் எச்சரித்துள்ளனா். இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் அன்புமணி .

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.