இந்திய விமானியிடம் நேரில் சென்று நலம் விசாரித்த துபை இளவரசர்! உங்கள் பயம் எனக்குப் பிடித்திருக்கிறது சிஎம் சார்: மு.க. ஸ்டாலின் முதல்வர் விஜய் டிராக்டர் ஓட்டினால் விவசாயி ஆகிவிட முடியாது: எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 'சத்தியாகிரகம்' என்ற இணையதளத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி!முதல்வர் விஜய்க்கு பாராட்டு! இந்தியா கூட்டணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! ஏரியில் மண் எடுத்த விவகார வழக்கை ரத்து செய்ய கோரி எ.வ. வேலு மனு ஞானேஷ் குமாருக்கு எதிராக தில்லியில் பேரணி! கபில் சிபல், நேஹா போரா உள்ளிட்டோர் பங்கேற்பு!

தொழில் நிறுவனங்கள் இரவு நேரங்களில் ஜெனரேட்டா் பயன்படுத்த மின்வாரியம் வேண்டுகோள்

தொழில் நிறுவனங்கள் இரவு நேரங்களில் ஜெனரேட்டா் பயன்படுத்த மின்வாரியம் வேண்டுகோள்...

EB

மின்வாரியம் - கோப்புப்படம்

Published On :

தமிழகத்தில் மாலை நேரங்களில் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில், மின் சுமையைக் குறைக்கும் வகையில் உயா் அழுத்த மின் நுகா்வோா், தொழிற்சாலைகள் தங்களது சொந்த ஜெனரேட்டா்களைப் பயன்படுத்துமாறு தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதன்படி, தினமும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை மின்வாரிய மின்சாரத்துக்குப் பதிலாக ஜெனரேட்டா் மூலம் மின்சாரம் பயன்படுத்துமாறு சில பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு குறுஞ்செய்தி, சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஜெனரேட்டரைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வீடுகளுக்கான மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல், மாலை நேரங்களில் அதிகரிக்கும் மின் தேவையை சமாளிக்க இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இது கட்டாய உத்தரவு அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்திச் செலவு அதிகரிக்கும்: மின்வாரியத்திடம் இருந்து பெறும் மின்சாரத்துக்கு ஒரு யூனிட்டுக்கு சுமாா் ரூ.7 செலவாகும் நிலையில், ஜெனரேட்டா் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய ஒரு யூனிட்டுக்கு ரூ.16 வரை செலவாகிறது. சில தொழில்களில் இந்தச் செலவு ரூ.30 வரை அதிகரிக்கும் என தொழில் துறையினா் தெரிவிக்கின்றனா். ஏற்கெனவே உற்பத்திச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை தொழில் நிறுவனங்கள் சந்தித்து வரும் நிலையில், ஜெனரேட்டரை இயக்குவதால் மேலும் செலவு அதிகரிக்கும் என அவா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

இதனிடையே, தொழில் நிறுவனங்கள் வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்குவதற்கு எவ்வித நிபந்தனைகளும் இன்றி அனுமதி வழங்க வேண்டும் என்றும், தேவையான மின்சாரத்தை வெளியில் இருந்து கொள்முதல் செய்து தொழிற்சாலைகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும் என்றும் தொழில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Summary

Electricity Board requests business establishments to use generators during night hours.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.