ஜந்தர் மந்தர் போராட்டத்தில் காவலர்களால் பாலியல் சீண்டல்; 3 பெண் பத்திரிகையாளர்கள் புகார்!ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைப்பிடிப்பு! வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு - காங்கிரஸ்மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் இன்று சாமி தரிசனம்?இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இஸ்ரேல் பிரதமர் உரையாடல்! உலக நாயகன் என புகழாரம்!தாராபுரம் பிரசாரம்: உதயநிதி மீது வழக்குப் பதிவு!தமிழ்நாட்டின் கடலோரத்தில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவு ஏற்படலாம்! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

தாய்மாமன் திட்டத்தில் தங்க மோதிரம் தராததால் செவிலியர் மீது தாக்குதல்!

கும்பகோணம் அருகே தாய்மாமன் திட்டத்தில் மோதிரம் தராததால் செவிலியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பற்றி...

Nurse attacked for failing to give a ring under the maternal uncle scheme!

தாக்குதலில் காயமடைந்தவர்கள்.

Published On :

தாய்மாமன் தங்க மோதிரம் தரவில்லை என்ற ஆத்திரத்தில், செவிலியர் மற்றும் அவரது குடும்பத்தினர மண்வெட்டியால் தாக்கிய இளைஞரால் பரபரப்பு நிலவியது.

​தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பம்பப்படையூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் அலமேலு(35). இவர் பட்டீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த மதனின் மனைவி வனிதா (26) என்பவருக்கு அரசு மருத்துவமனையில் கடந்த 16ஆம் தேதி இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை மதன் மது போதையில் செவிலியர் அலமேலுவிடம் தாய்மாமன் தங்க மோதிரம் எனக்கு ஏன் தரவில்லை என கேட்டுத் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு இருந்த செவிலியர் அலமேலுவின் அண்ணன் சுமன் (43) சின்னம்மா சுஜாதா (50) ஆகியோர் தகராறில் ஈடுபட்ட மதனை தடுத்துள்ளனர்.

​ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மதன், அங்கிருந்த மண்வெட்டியால் செவிலியர் அலமேலுவை தாக்கியுள்ளார். இதில் அருகில் இருந்த சுமன் மற்றும் சுஜாதா ஆகியோருக்கு கை மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் செவிலியர் அலமேலுவிற்கு கை பகுதியில் உள்காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த மூவரும் தற்போது சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ​இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பட்டீஸ்வரம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.

Summary

"Tension prevailed as a youth attacked a nurse and her family members with a spade out of rage because his maternal uncle did not give him a gold ring."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER