காலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்புவெற்றிப் பயணம் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரம் நிறைவு. அக். 6-ல் வாக்குப் பதிவு! அக். 9-ல் வாக்கு எண்ணிக்கை!எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் கட்டிக்காத்த இந்த இயக்கம், சுயநலவாதிகளின் சூழ்ச்சிக்கு பலியாக கூடாது: எடப்பாடி பழனிசாமிதவெக ஆட்சி தொடர மக்கள் ஆதரவு தேவை: விஜய் வேண்டுகோள்அரசியல் வாரிசின் மகனோ, நடிகனோ அல்ல! எளிய மனிதன் நான் - எடப்பாடி பழனிசாமிநிறைவு விழாவில் தேசிய கொடி ஏந்திய இந்திய வீராங்கனை..! 2030 கத்தாரில் அடுத்த ஆசிய விளையாட்டு!

காலாண்டு விடுமுறை நிறைவு: மீண்டும் பள்ளிகள் திறப்பு

காலாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து...

பள்ளிகள் திறப்பு - பிரதிப் படம்

Published On :

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் திங்கள்கிழமையில் (அக். 5) பள்ளிகள் திறக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வுகள் முடிந்து, விடுமுறை அறிவிக்கப்பட்டு, 9 நாள்கள் விடுமுறையும் இன்றுடன் நிறைவடைகிறது.

இதனையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் நாளை (அக். 5) பள்ளிகள் திறக்கப்படுகிறது.

மேலும், ஒன்று முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்களும் வழங்கப்படவுள்ளது.

இருப்பினும், அக். 6 ஆம் தேதியில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறவிருப்பதால், இரு தொகுதிகளுக்குள்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அக். 5, 6 தேதிகளிலும், தனியார் பள்ளிகளுக்கு அக். 6 மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விரு தொகுதிகளுக்குள்பட்ட பள்ளிகள் அக். 7 ஆம் தேதியில் திறக்கப்படுகிறது.

Summary

Schools to reopen tomorrow after quarterly holidays

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.