கேரளத்தில் அக். 19 முதல் தொடர் விடுமுறை: மகிழ்ச்சியில் மக்கள்!
கேரள அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது தொடர்பாக...

தொடர் விடுமுறை - file image
நவராத்திரியின் எட்டாம் நாளான துர்காஷ்டமியான அக். 19 கேரள மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பொது நிர்வாகத் துறை வெளியிட்ட அறிவிப்பில்,
கேரள மாநிலத்தில் துர்காஷ்டமியான அக். 19ல் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை அனைத்து அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், மாற்றுமுறை ஆவணங்கள் சட்டத்தின் கீழ் வரும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 20, 21 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகை விடுமுறைகளுக்கு முன்னதாக இந்த விடுமுறை வருவதால், மாநில மக்கள் மகிழச்சியடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


