தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில் தடம் புரண்டது! ரயில் சேவை நிறுத்தம்!பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத்தை எதிர்த்த வழக்கு வாபஸ்!திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! துவரம் பருப்பு கொள்முதல் விலையில் கிலோவுக்கு ரூ.31 மிச்சம்! தவெக அரசு சாதனைபிரசாரத்தில் கோடிக்கணக்கில் செலவழித்ததாக தவெக மீது புகார்குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு ஈரான் எண்ணெய் வளத் துறை அமைச்சர் திடீர் ராஜிநாமா! ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருந்து அளிக்கிறார் முதல்வர் விஜய்! தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம் (அக். 05) திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! சூடுபிடிக்கும் 2006 கேரள வழக்கு! விதிமீறல்: தவெக வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்தார்களா? தேர்தல் ஆணையத்தில் புகார் சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!

ஆனைமலையாறு - நல்லாறு திட்டம்: அமைச்சர்கள் பயணம் திடீர் ஒத்திவைப்பு! என்ன காரணம்?

ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் குறித்து ஆலோசிக்க அமைச்சர்கள் கேரளம் செல்லவிருந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது பற்றி...

பிரதிப் படம்

Published On :

தாராபுரத்தில் தேர்தல் நடத்தை விதிகளால் ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் குறித்து ஆலோசிக்க ஆலோசிக்க கேரளம் செல்லவிருந்த அமைச்சர்களின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றப்படாமல் இருக்கும் ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து கேரள முதல்வரைச் சந்த்தி பேச்சுவார்த்தை நடத்த தமிழக அமைச்சர்கள் 4 பேர் இன்று (அக். 5) கேரளம் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் இருப்பதால், அமைச்சர்களின் கேரள பயணம் ஒத்திவைக்கப்பட்டது. ஏனெனில், ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தால் பலனடையக் கூடிய மாவட்டமாக திருப்பூர் மாவட்டம் இருப்பதால், அமைச்சர்களின் பயணம் ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து, தாராபுரத்தில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வேறொரு நாளில் அமைச்சர்கள் கேரளம் செல்லத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனைமலையாறு - நல்லாறு திட்டம்

மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக் கடலில் கலக்கும் ஆறுகளை, கிழக்கு நோக்கி திருப்பி கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பாசன வசதியை ஏற்படுத்த, காமராஜர் ஆட்சிக் காலத்தில் பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத் திட்டம் உருவாக்கப்பட்டது.

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டம் ஆனைமலைப் பகுதியில் மேற்கு நோக்கி பாயும் ஆறுகளைத் தடுத்து, சமவெளியில் பாயும் இரு ஆறுகளுடன் இணைத்து கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்டங்களின் வட பகுதிகளுக்கு பாசன வசதி பெற உதவுகிறது. இதில், கேரளத்தின் பாலக்காடு மாவட்டம், சித்தூா் தாலுகாவும் பாசன வசதி பெறுகிறது. இது, கேரள அரசின் ஒப்புதல் மற்றும் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டதாகும்.

இத்திட்டத்தின்படி பரம்பிக்குளம், மேல் ஆழியாறு, ஆழியாறு, மேல் நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, துாணக்கடவு, பெருவாரிப்பள்ளம், திருமூர்த்தி (பாலாறு), இடைமலையாறு (கேரளம்), ஆனைமலையாறு, நல்லாறு என 12 அணைகள் கட்டப்பட வேண்டும். இவற்றில் 9 அணைகள் கட்டப்பட்டு விட்டன; இடைமலையாறு அணையை கேரள அரசும் கட்டி முடித்து விட்டது.

இருப்பினும், ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் மட்டும் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது. கடந்த 50 ஆண்டுகளாக ஒவ்வொரு தேர்தல் வாக்குறுதியிலும் ஆனைமலையாறு - நல்லாறு திட்டம் இடம்பெறும்போதிலும், திட்டம் செயல்படுத்தப்படுவதில்லை.

இவ்விரு அணைகளையும் கட்டி முடிக்குமாறு கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர். ஏனெனில், இந்த இரு மாவட்டங்களிலும் பாசனத்துக்காக 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தண்ணீர் விடப்படுகிறது. இவ்விரு அணைகளும் கட்டப்படுமாயின், ஆண்டுக்கு ஒரு முறை தண்ணீர் விட முடியும்.

இந்த மாவட்டங்களில் அடிக்கடி வறட்சி ஏற்பட்டு வரும்நிலையில், அணைகள் கட்டப்பட்டால் - நிலத்தடி நீர் மிகுந்து குடிநீர்த் தட்டுப்பாடு இருக்காது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் வறட்சி ஏற்பட்டு, பிரதான பயிர் தென்னை விளைச்சல் சரிந்து, தேங்காயின் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. அணைகள் கட்டப்பட்டு, இவ்விரு மாவட்டங்களுக்கும் நீர்த் தேவை பூர்த்தி செய்யப்பட்டால், தேங்காய் உற்பத்தியும் அதிகரிக்கும்; விலையும் குறையும் என கூறப்படுகிறது.

பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத் திட்டத்தின்படி, 12 அணைகளும் கட்டி முடிக்கப்பட்டால், ஆண்டுக்கு 48 முதல் 50 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகத்துக்கு 30.5 டிஎம்சி-யும், கேரளத்துக்கு 19.5 டிஎம்சி தண்ணீர் பங்கிடலாம் என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Summary

Anaimalaiyar-Nallar Project: Ministers' visit postponed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.