சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!தொகுதிப் பங்கீட்டைவிட வெற்றியே முக்கியம்: அகிலேஷ் யாதவ் திட்டவட்டம்!தயார் நிலையில் காய்ச்சல் வார்டுகள்: மருத்துவமனைகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவுஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு கைது அதிகாரம் நீக்கம்? அக். 7 கவுன்சில் கூட்டத்தில் பரிசீலிக்க வாய்ப்பு!

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருந்து அளிக்கிறார் முதல்வர் விஜய்!

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் விருந்தளிப்பது குறித்து...

CM Vijay

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Published On :

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் விருந்து அளிக்கவுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

ஜப்பானில் உள்ள அய்சி மாகாணத்தின் நகோயா நகரில் கடந்த செப்டம்பா் 19-ஆம் தேதியில் 20 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. 16 நாள்கள் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் 46 நாடுகளில் இருந்து சுமாா் 11,000 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

43 விளையாட்டுகளில் 469 பிரிவுகளில் பந்தயங்களும் நடத்தப்பட்டன. அதில் வென்றவா்களுக்கு 483 தங்கம், 483 வெள்ளி, 654 வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. போட்டியின் வரலாற்றில் இதுவரை இல்லாத எண்ணிக்கையாக, இந்த முறை சுமாா் 350 சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

போட்டியில் இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் என, மொத்தமாக 85 பதக்கங்களுடன் 4-ஆம் இடம்பிடித்து நிறைவு செய்தது.

மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு அரசு சார்பில் பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளை முதல்வர் விஜய் விரைவில் சந்திக்கவிருப்பதாகவும், அவர்களுக்கு விருந்தளிக்க ஏற்பாடு செய்யப்படவிருப்பதாகவும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

Summary

CM Vijay is hosting a banquet for the medal-winning athletes from Tamilnadu at the Asian Games

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER