திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! 2006 கேரள லஞ்ச முறைகேடு வழக்கு! துவரம் பருப்பு கொள்முதல் விலையில் கிலோவுக்கு ரூ.31 மிச்சம்! தவெக அரசு சாதனைபிரசாரத்தில் கோடிக்கணக்கில் செலவழித்ததாக தவெக மீது புகார்குரூப் 4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது! 10,000 பணியிடங்கள் நிரப்ப வாய்ப்பு ஈரான் எண்ணெய் வளத் துறை அமைச்சர் திடீர் ராஜிநாமா! ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு விருந்து அளிக்கிறார் முதல்வர் விஜய்! தங்கம், வெள்ளி விலை இன்றைய நிலவரம் (அக். 05) திட்ட தலைவர் தற்கொலை குறிப்பில் ஞானேஷ் குமார் பெயர்! சூடுபிடிக்கும் 2006 கேரள வழக்கு! விதிமீறல்: தவெக வேட்பாளர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்தார்களா? தேர்தல் ஆணையத்தில் புகார் சாலைத் திட்ட ஊழல் குற்றச்சாட்டு: ஞானேஷ் குமாருக்கு எதிராக விசாரணை: கேரள அரசு உத்தரவு!

துவரம் பருப்பு கொள்முதல் விலையில் கிலோவுக்கு ரூ.31 மிச்சம்! தவெக அரசு சாதனை

துவரம் பருப்பு கொள்முதல் விலையில் கிலோவுக்கு ரூ.31 மிச்சம் பிடித்து தவெக அரசு சாதனை படைத்துள்ளது பற்றி..

நியாயவிலைக் கடையில் முதல்வர் விஜய்

நியாயவிலைக் கடையில் முதல்வர் விஜய் - கோப்பிலிருந்து

Published On :

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பைக், கடந்த காலங்களைக் காட்டிலும் குறைவான விலையில் கொள்முதல் செய்து தவெக அரசு ரூ.187 கோடி மிச்சம் பிடித்திருப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில், அரிசி, சர்க்கரை, கோதுமையுடன் துவரம் பருப்பும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக தமிழக அரசு துவரம் பருப்பு கொள்முதல் செய்து வழங்கி வருகிறது. இது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டிருக்கும் தகவலில், துவரம் பருப்பு கொள்முதல் விலையை குறைவாகக் கொடுத்து கடந்த மூன்று மாதங்களில் ரூ.187 கோடி அளவுக்கு தவெக அரசு மிச்சம் பிடித்துள்ளது.

அதாவது கடந்த திமுக ஆட்சியில் ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.109.15க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தவெக அரசு ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.77.89-க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் ரூ.31 குறைவாக கொள்முதல் செய்யப்பட்டது. இதனால், கடந்த மூன்று மாத காலத்தில் செலவுத் தொகையில் ரூ.187 கோடி மிச்சம் பிடித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

அதாவது, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் துவரம் பருப்பு கொள்முதலுக்கு திமுக ஆட்சியில் ரூ.654 கோடி செலவிடப்பட்டது. ஆனால் தவெக ஆட்சியில் ரூ.467 கோடி செலவிடப்பட்டு, ரூ.187 கோடி மிச்சம் பிடிக்கப்பட்டுள்ளது.

நியாயவிலைக் கடைகளுக்கு வழங்க 60 ஆயிரம் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விலை குறைந்தாலும் தரத்தில் எவ்வித குறையும் இல்லை என்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை தெளிவுபடுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER