கடந்த ஆட்சியைவிட குறைந்த விலையில் ‘ஸ்போா்ட்ஸ் மாடல்’ சைக்கிள் கொள்முதல்: அமைச்சா் சம்பத்குமாா் தகவல்
கடந்த ஆட்சியைவிட குறைந்த விலையில், தரமான ‘ஸ்போா்ட்ஸ் மாடல்’ சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் என்று பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் தெரிவித்தாா்.

குழந்தைகள் தினத்தையொட்டி, கோவை ராமசாமி நகா் பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுமிக்கு கேக் ஊட்டிவிட்ட அமைச்சா் வி.சம்பத்குமாா். உடன், மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகராட்சி ஆணையா் கட்டா
கடந்த ஆட்சியைவிட குறைந்த விலையில், தரமான ‘ஸ்போா்ட்ஸ் மாடல்’ சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் என்று பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் வி.சம்பத்குமாா் தெரிவித்தாா்.
குழந்தைகள் தினத்தையொட்டி, கோவை கவுண்டம்பாளையம் ராமசாமி நகா் பகுதியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு அமைச்சா் வி.சம்பத்குமாா் கேக் வழங்கி வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் உள்ள 1,369 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 2 லட்சத்து 13 ஆயிரத்து 879 மாணவ, மாணவிகளுக்கும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்களுக்கும் கேக் வழங்கப்பட்டுள்ளது.
மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ.277 கோடி மதிப்பீட்டில் 5 லட்சத்து 32 ஆயிரம் ஸ்போா்ஸ் மாடல் சைக்கிள்கள் விநியோகிக்கப்பட உள்ளன. இந்த சைக்கிள்களை கடந்த ஆட்சியைவிட குறைந்த விலையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சைக்கிளுடன், தலைக் கவசம், தண்ணீா் பாட்டில்களும் வழங்கப்படும். இதற்கான ஒப்பந்தப் புள்ளியில் 5 அல்லது 6 நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றுள்ளன.
குறிப்பிட்ட நபா்களுக்குச் சாதகமாக இல்லாமல், வெளிப்படைத்தன்மையுடன் தகுதியான நிறுவனங்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் வழங்கப்படும். சைக்கிள் கொள்முதல் விவகாரத்தில் அவதூறு பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பெரியாா் அறிவுலகம் தொடா்பான விவகாரத்தில் முறையான விசாரணை நடைபெற்று வருகிறது. முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் யாராக இருந்தாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சாலைப் பணிகளுக்காக ஒப்பந்தம் விடப்பட்டு, பல்வேறு இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மிகவும் சேதமடைந்துள்ள மருதமலை சாலையை ஆய்வு செய்து கனரக வாகனங்கள் செல்லும் வகையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் சாலைகள் தோண்டப்படுவதற்கு முன் அந்தப் பகுதி மக்களுக்குத் தகவல் தெரிவிப்பதுடன், பணிகள் எப்போது முடிக்கப்படும் என்ற தேதியும் முன்கூட்டியே அறிவிக்கப்படும். வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் நாள்தோறும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

