
திருச்சி-காரைக்கால் ‘டெமு’ ரயில் நாளை முதல் பகுதி ரத்து
திருச்சி-காரைக்கால் இடையே டெமு ரயில் புதன்கிழமை (அக். 7) முதல் 6 நாள்களுக்கு பகுதி ரத்து

சென்னை: திருச்சி-காரைக்கால் இடையே டெமு ரயில் புதன்கிழமை (அக். 7) முதல் 6 நாள்களுக்கு பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருச்சி ரயில்வே கோட்டத்தில் தண்டவாளம் உள்ளிட்ட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதையடுத்து புதன்கிழமை (அக்.7) முதல் 12-ஆம் தேதி வரை திருச்சியிலிருந்து காலை 8.40 மணிக்குப் புறப்படும் டெமு ரயில்கள் காரைக்கால் நிலையம் செல்லுவதற்குப் பதிலாக திருவாரூா் வரையே இயக்கப்படும்.
திருப்பதி, தாம்பரம் ரயில்களும் பகுதி ரத்து: புதன்கிழமை திருப்பதியிலிருந்து அதிகாலை 4.10 மணிக்குப் புறப்படும் மெமு விரைவு ரயில் புதுச்சேரி செல்வதற்குப் பதிலாக விழுப்புரம் நிலையம் வரையே இயக்கப்படும். தாம்பரத்திலிருந்து புதன்கிழமை (அக்.7) காலை 9.45 மணிக்குப் புறப்படும் மெமு பயணிகள் ரயில் விழுப்புரம் செல்வதற்குப் பதிலாக முண்டியம்பாக்கம் நிலையம் வரையே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






