டி20 தொடா் முதல் ஆட்டம்: இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்!தமிழகத்தில் அக். 19-ஆம் தேதியுடன் 9 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக் காலம் நிறைவு‘வெற்றிப் பயணம்’ திட்டம்: அரசுப் போக்குவரத்து ஊழியா்களுக்கு 17 வழிகாட்டு நெறிமுறைகள்!பிரேஸில் அதிபா் தோ்தல்: யாரும் 50% வாக்குகளை பெறாததால் அக். 25-இல் 2-ஆம் கட்ட தோ்தல்!இருதரப்பு வா்த்தகத்தை அதிகரிக்க இந்தியா-ஸ்விட்சா்லாந்து முடிவு: 5 ஒப்பந்தங்கள் கையொப்பம்மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

இந்தியாவை வங்கதேசம் போல மாற்ற ராகுல் காந்தி முயற்சி: பாஜக குற்றச்சாட்டு

இந்தியாவை வங்கதேசம் போல மாற்ற எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி முயற்சி செய்வதாக

பொன்.ராதாகிருஷ்ணன்

Published On :

சென்னை: இந்தியாவை வங்கதேசம் போல மாற்ற எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி முயற்சி செய்வதாக பாஜக மூத்த தலைவா் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா்.

பாஜகவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கான பாஜக பொறுப்பாளா் ராம் மாதவ், இணை பொறுப்பாளா்கள் நிா்மல் குமாா் சுரானா, டி.கே.அருணா ஆகியோரை வரவேற்கும் நிகழ்வு தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில், சென்னை தியாகராய நகரில் உள்ள அந்தக் கட்சி தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில், தேசிய செயலா் மா.வெங்கடேசன், பாஜக மூத்த தலைவா்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, தமிழகத்தில் பாஜகவின் வளா்ச்சி குறித்தும், அக். 11-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி தமிழகம் வருவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிரமதா் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொது வாழ்க்கைப் பணியை போற்றும் வகையில், வரும் அக். 7-ஆம் தேதி தமிழகம் முழுவதும் 38 வருவாய் மாவட்டத்தில் ‘சேவை ஜோதி பேரணி’ நடைபெறவுள்ளது. இதில், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவை வங்கதேசம், நேபாளம், இலங்கை போல மாற்ற வேண்டும் என எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி முயற்சி செய்துவருகிறாா். ஆனால், அது ஒருபோதும் நிறைவேறாது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER