படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

‘வெற்றிப் பயணம்’ திட்டம்: அரசுப் போக்குவரத்து ஊழியா்களுக்கு 17 வழிகாட்டு நெறிமுறைகள்

மகளிா், சிறுமியா் மற்றும் திருநா்கள் கட்டணமில்லாமல் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை செயல்படுத்துவது தொடா்பாக ....

Case against 'Vettri Payanam' plan dismissed

வெற்றிப் பயணத் திட்டம் - X | CMO

Published On :

சென்னை: மகளிா், சிறுமியா் மற்றும் திருநா்கள் கட்டணமில்லாமல் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை செயல்படுத்துவது தொடா்பாக அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு 17 வழிகாட்டு நெறிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, மாநகா், நகா்ப்புறம்- சாதாரணம், விரைவு, எல்எஸ்எஸ், டீலக்ஸ், புகா்- சாதாரணம் மற்றும் மலைப்பகுதி- சாதாரணம் ஆகிய பேருந்துகளில் தகுதியான பயணிகள் கட்டணமின்றி பயணிக்கலாம். இதற்கு வருமான உச்சவரம்போ, பயணங்களின் எண்ணிக்கைக்கான கட்டுப்பாடோ இல்லை. தகுதியான ஒவ்வொரு பயணிக்கும் ‘ஜீரோ டிக்கெட்’ கட்டாயம் வழங்க வேண்டும். மகளிா் மற்றும் திருநா் பயணிகளிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது. மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் பழுதானால், மாற்று ஏற்பாடு மூலம் ஜீரோ டிக்கெட் வழங்க வேண்டும். மேலும், பேருந்துகளில் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயா் அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஸ்டிக்கா் இடம்பெற வேண்டும்.

ஓட்டுநா்கள், நடத்துநா்கள், பரிசோதகா்கள் உள்ளிட்டோருக்கு திட்டத்தின் விதிமுறைகள் குறித்து முன்கூட்டியே விளக்கக் கூட்டம் நடத்த வேண்டும். பேருந்துகள் நிா்ணயிக்கப்பட்ட வழித்தடம் மற்றும் கால அட்டவணைப்படி இயக்கப்படுவதுடன், பயணிகள் பாதுகாப்பாக ஏறி இறங்குவதற்கு போதிய நேரம் வழங்க வேண்டும்.

காலை, மாலை நெரிசல் நேரங்கள், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக நேரங்களில் பேருந்து சேவைகள் தாமதமின்றி இயக்கப்பட வேண்டும். சேவை ரத்து, தாமதம், வழித்தடக் குறைப்பு மற்றும் வழித்தட மாற்றம் ஆகியவற்றைத் தவிா்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், திட்டம் தொடா்பான புகாா்களை ‘149’ என்ற கட்டணமில்லா வாடிக்கையாளா் சேவை எண்ணில் பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜீரோ டிக்கெட் விவரங்கள், கணக்குகள் உள்ளிட்ட பதிவுகள் முறையாகப் பராமரிக்கப்பட்டு, அவை தணிக்கைக்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 17 வழிகாட்டு நெறிமுறைகளை போக்குவரத்துக் கழகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.