சிஜேபி அபிஜீத் தீப்கே கைதுக்கு ராகுல் கண்டனம்ரயில்வே பணியாளர்களுக்கு தீபாவளி போனஸாக 78 நாள்களுக்கான ஊதியம் வழங்கப்படும்!ரூ. 30 லட்சம் வரை நீண்ட காலக் கடன்கள் வழங்கப்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு!சென்னை ஒக்கியம் மடுவு பகுதியில் மழைநீர் வடிகால் பணிகள்: முதல்வர் விஜய் ஆய்வு!சகோதரியாக எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்: சிஜேபியினர் கைதுக்கு மமதா கண்டனம்!ஜனநாயகப் படுகொலையின் முதல் குற்றவாளி மு.க. ஸ்டாலின்! ஆதவ் அர்ஜுனா

மாதவரம் ஆவின் பால் பண்ணை ஆய்வகக் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!

சென்னை மாதவரத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் முதல்வர் விஜய் ஆய்வு செய்து ஆய்வகக் கட்டடத்தையும் திறந்துவைத்தார்.

Updated On :

சென்னை மாதவரத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் முதல்வர் விஜய் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ரூ. 2.23 கோடியில் கட்டப்பட்ட மாநில ஆய்வக துணைக் கட்டடத்தையும் முதல்வர் விஜய் இன்று திறந்துவைத்தார்.

அதிநவீன கருவிகளுடன் பால் மற்றும் பால் பொருள்களை துல்லியமாக ஆய்வு செய்யும் வகையில் இந்திய தர நிர்ணய ஆணைய அமைப்பின் வழிகாட்டுதலின்படி இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ. 152 கோடியில் மாதவரம் ஆவின் பால் பண்ணையில் ஒரு புதிய கட்டடம் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. அதையும் முதல்வர் பார்வையிட்டார்.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மாதவரம் பால் பண்ணையில்தான் பால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Story image

இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று (7.10.2026) சென்னை, மாதவரத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் 2 கோடியே 23 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஆவின் மாநில மத்திய ஆய்வகத்தின் துணைக் கட்டடத்தைத் திறந்து வைத்தார். மேலும், மாதவரம் பால் பண்ணையின் செயல்பாடுகளைப் பார்வையிட்டதோடு, புதிய பால் பண்ணையின் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாதவரம் பால் பண்ணை

மாதவரம் பால் பண்ணையானது மிகப் பழமையான பால்பதன நிறுவனமாகும். இந்நிறுவனம் 1963-ஆம் ஆண்டு, அரசு மற்றும் யுனிசெஃப் (UNICEF) ஆகியவற்றின் கூட்டுத் திட்டத்தின் மூலம் மாதவரம் பால் பண்ணை வளாகத்தில் நாளொன்றுக்கு 50,000 லிட்டர் பால் பதப்படுத்தும் திறனுடன் நிறுவப்பட்டது. இதன் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு, தற்போது நாளொன்றுக்கு சுமார் 4.50 இலட்சம் லிட்டர் பாலைப் பதப்படுத்தும் திறன் பெற்றுள்ளது. 

Story image

ஆவின் மாநில மத்திய ஆய்வகத்தின் துணைக் கட்டடத்தைத் திறந்து வைத்தல்

இந்திய தர நிர்ணய ஆணையம் (Bureau of Indian Standards), இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) தரநிலைகளின்படி குடிநீர் சோதனைகள், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (Tamil Nadu Pollution Control Board) விதிமுறைகளின்படி கழிவுநீர் சோதனைகள் செய்வதற்காக, சென்னை, மாதவரத்தில் 2 கோடியே 23 இலட்சம் ரூபாய் செலவில் அதிநவீன கருவிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஆவின் மாநில மத்திய ஆய்வகத்தின் துணைக் கட்டடத்தை முதல்வர் இன்று திறந்து வைத்தார். 

இந்த ஆய்வகமானது, நவீன உபகரணங்களின் உதவியுடன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களின் தேவைகளுக்கான அனைத்துத் தரப் பரிசோதனைகளைத் துல்லியமாகவும், விரைவாகவும், சர்வதேச தரநிலைகளுக்கு இணங்கவும் மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 

மாதவரம் பால் பண்ணையில் பால் கையாளும் மற்றும் விநியோகப் பணிகளைப் பார்வையிடுதல்

மாதவரம் பால் பண்ணையில் நாளொன்றுக்கு சுமார் 4.50 லட்சம் லிட்டர் பால் கையாளப்பட்டு, நுகர்வோரின் பால் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சராசரியாக 120 வாகனங்கள் மூலம் வடசென்னைப் பகுதிகளில் பால் விநியோகப் பணிகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மாதவரம் பால் பண்ணையில் நடைபெற்று வரும் பால் கையாளும் மற்றும் பால் விநியோகப் பணிகளை முதல்வர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

புதிய பால் பண்ணையின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தல்

சென்னை மாநகர மக்களின் எதிர்கால பால் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மாதவரத்தில் நாளொன்றுக்கு 7 லட்சம் லிட்டர் பால் கையாளும் திறன் கொண்ட புதிய பால் பண்ணை 152 கோடியே 26 லட்சம் ரூபாய்  மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இது முழுமையான வசதிகளுடன் தானியங்கி தொழில்நுட்பத்துடன்கூடிய நவீன பால் பண்ணையாக அமைக்கப்பட்டு வருகிறது. 

முதல்வர், மாதவரத்தில் நடைபெற்றுவரும் புதிய பால் பண்ணையின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளின் முன்னேற்றம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்ததோடு, இப்பணிகளை துரிதப்படுத்தவும் அறிவுறுத்தினார். 

இந்நிகழ்ச்சியில், பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி. விஜயலக்ஷ்மி, சட்டமன்ற உறுப்பினர்கள்,
கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் அனு ஜார்ஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஆவின் பால் தட்டுப்பாடு

சமீபமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் ஆவின் பால் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

ஆவின் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டாலும் ஆவின் விநியோகம் முன்பைவிட குறைவாக இருப்பதாகவும் இதனால் ஆவின் கடைகளிலும் இதர விற்பனை கடைகளிலும் சில பகுதிகளில் தொடர்ந்து ஆவின் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

ஆவின் கடை அல்லாத பிற கடைகளில் ஆவின் பால் (பச்சை நிற பால்) கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

CM Vijay inaugurated the laboratory at the Aavin milk dairy in Madhavaram, Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.