
மேட்டுப்பாளையம் அருகே பள்ளி சுற்றுச்சுவர் இடிந்தது: கழிவு நீா் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி
மேட்டுப்பாளையம் அருகே பெய்த கனமழைக்கு அரசுப் பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால்,குடியிருப்புகளுக்குள் கழிவு நீர் புகுந்தது தொடர்பாக...

மேட்டுப்பாளையம் அருகே பெய்த கனமழைக்கு இடிந்து விழுந்த அரசுப் பள்ளி சுற்றுச்சுவர் - டிஎன்எஸ்
மேட்டுப்பாளையம் அருகே சேரன் நகர் பகுதியில் பெய்த கனமழைக்கு அரசுப் பள்ளியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால், அந்த பகுதி குடியிருப்புகளுக்குள் கழிவு நீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்தனர்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சேரன் நகர் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பகுதியைச் சுற்றி ஏராளமான குடியிருப்புகள் இருந்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த கனமழை காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து குடியிருப்பு மீது விழுந்துள்ளது. மேலும், அந்த சுற்றுச்சூவர் ஒட்டியே கால்வாயும் இருந்து வந்த நிலையில், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால் அந்த கால்வாய் முழுவதும் தேங்கிய கழிவுநீரும், மழைநீரும் அருகில் உள்ள குடியிருப்புக்குள் புகுந்தது.
இதனால் அந்த பள்ளியின் அருகே வசித்து வந்த சரவணன், தனபாக்கியம், பாலன், ரவிச்சந்திரா உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு வாசிகளின் வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்ததால் இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருக்கும் நிலை ஏற்பட்டது
மேலும், வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்ததால் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் தண்ணீரில் சேதமடைந்த நிலையில் அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, குடியிருப்புக்குள் புகுந்த கழிவுநீரை உடனடியாக அகற்றவும், இடிந்த சுற்றுச்சுவரை சீரமைப்பதுடன் கழிவுநீர் வாய்க்காலை சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Compound wall of government school near Mettupalayam collapses...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






