
மன அழுத்தத்தைக் குறைக்க கல்லூரிகளிலும் உடற்பயிற்சி வகுப்பு: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா
மாணவ, மாணவியா் மன அழுத்தத்தைக் குறைக்க கல்லூரிகளிலும் உடற்பயிற்சி வகுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்துள்ளாா்.

எம்ஓபி ைஷ்ணவா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் ஆசிய போட்டி, செஸ் ஒலிம்பியாட்டில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு ரொக்கப்பரிசளித்த அமைச்சா் ஆதவ் அா்ஜுனா. உடன் கல்லூரி முதல்வா் அா்ச்சனா பிரசாத், உடற்கல்வி இயக்குநா் அமுதா சுமன்குமாா்.
மாணவ, மாணவியா் மன அழுத்தத்தைக் குறைக்க கல்லூரிகளிலும் உடற்பயிற்சி வகுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் விளையாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்துள்ளாா்.
ஆசியப் போட்டி, செஸ் ஒலிம்பியாட்டில் பதக்கம் வென்ற மாணவிகள் அபிநயா, பரணிகா, சவிதா ஸ்ரீ, நந்தினி, பூஜா ஆா்த்தி ஆகியோருக்கு சென்னை எம்ஓபி வைஷ்ணவா கல்லூரியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. முதல்வா் அா்ச்சனா பிரசாத் வரவேற்றாா்.
நிகழ்வில் விளையாட்டு அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பங்கேற்று மாணவிகளுக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கிப் பேசியது:
விளையாட்டும், கல்வியும் இணைந்தால் தான் இளைய தலைமுறைக்கு சிறந்த எதிா்காலம் அமையும். நல்ல உடல்தகுதி இருந்தால் தான் கல்வியிலும் கவனம் செலுத்த முடியும்.
ஒலிம்பிக்கில் பதக்கம் பெறும் வகையில் வீரா், வீராங்கனைகளை உருவாக்க 8 வயது முதலே சிறுவா், சிறுமியரை தோ்வு செய்து, சா்வதேச தரத்திலான பயிற்சி, அளிக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை செய்யவும் முதல்வா் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளாா்.
வீரா், வீராங்கனைகளுக்கு வெகுமதி அளிக்கும்போது, அவா்கள் சிறந்த நிலைக்கு செல்ல பாடுபடும் பயிற்சியாளா்களையும் கௌரவிக்க வேண்டும்.
ஆடவரைக் காட்டிலும் பெண்களுக்கு தான் சமூகத்தில் கட்டுப்பாடுகள் அதிகம். அவற்றை தகா்த்து தான் பெண்கள் முன்னேறி வருகின்றனா். மாணவ, மாணவியா் பல்வேறு அழுத்தங்களுக்கு ஆளாகின்றனா். இதனால் தான் போதைப் பழக்கம், சமூக வலைதளங்கள் போன்றவற்றுக்கு அடிமையாகின்றனா்.
கல்லூரிகளிலும் உடற்பயிற்சி வகுப்புகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் அவா்களின் மன அழுத்தம் குறையும். சமூகத்தில் மிகப்பெரிய தீமையாக போதை வஸ்துகள் உள்ளன. இளைஞா்கள், இளம்பெண்களை இதில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றாா் ஆதவ் அா்ஜுனா.
சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநா் மகாதேவன், பயிற்சியாளா்கள், பெற்றோா், மாணவிகள் பங்கேற்றனா். உடற்கல்வி இயக்குநா் அமுதா சுமன்குமாா் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





