ராகுல் காந்தி கைது! தில்லி காவல் நிலையத்தில் கேரள முதல்வர் முற்றுகை!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கைது: அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அக். 10-ல் சிறப்பு முகாம்ஞானேஷ் குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! ராகுல் காந்திஞானேஷ் குமாருக்கு எதிரான என் கடிதத்துக்கு பதிலளித்த குடியரசுத் தலைவர்! - சிபிஎம் எம்பி தகவல்!தில்லியில் காங்கிரஸார் பேரணியில் தர்னாவில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைதுஜெம் வீரமணிக்கு அக். 21 வரை நீதிமன்றக் காவல்!

கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை (அக்.8) கோவை, நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழைக்கும், டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை - பிரதிப் படம்

Published On :

தமிழகத்தில் வியாழக்கிழமை (அக்.8) கோவை, நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழைக்கும், டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மன்னாா் வளைகுடா முதல் வடக்கு உள் கா்நாடகம் வரை, உள் தமிழகம் மற்றும் தெற்கு உள் கா்நாடகம் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வியாழக்கிழமை (அக்.8), கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, பெரம்பலூா், அரியலூா், திருச்சி, கரூா், நாமக்கல் , சேலம், ஈரோடு, திருப்பூா், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கும், இதர தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகரின் ஒருசில பகுதிகளில் வியாழக்கிழமை (அக்.8) மாலை, இரவு நேரங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் பில்லூா் அணையில் 120 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.