
‘மின்வெட்டை மிஞ்சும் அரிவாள் வெட்டு; ஆக்ஷன் எடுங்க சிஎம் சார்’ - மு.க. ஸ்டாலின் கண்டனம்!
மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டால் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளதாக மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய் - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - (கோப்புப் படம்)
தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டால் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “தவெக ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு சட்டம் ஒழுங்கு சீரழிந்து ரத்தச் சகதியில் சிக்கியுள்ள தமிழ்நாடு குற்றவாளிகள் தைரியமாகவும் பொதுமக்கள் அச்சத்தோடும் வாழும் சூழலுக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளதற்குச் சான்றாக கடந்த 24 மணி நேரத்தில் வெளியாகிய அதிர்ச்சிச் செய்திகள் அமைந்துள்ளன.
சென்னை மயிலாப்பூரில் 19 வயது இளைஞர் சத்தியசீலன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திருத்தணியில் தனது 17 வயது மகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்த தந்தை அவரது வீட்டின் முன்பே வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால் இந்தக் கொலை நிகழ்ந்திருக்கிறது.
சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த ஜனாபாய் எனும் மூதாட்டி பகலிலேயே கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலையாளிகள் அவரது நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டுத் திரும்பும்போதே வீரபத்திரன் என்பவர் மர்ம நபர்களால் மனைவி முன்பு வைத்துச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே மது போதையில் நிர்வாணமாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சோழவந்தானில் டாஸ்மாக் கடை அருகே பைக்கில் வந்த சியாம் சுந்தர்ராஜன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
எண்ணூர் இரயில் நிலையத்திலேயே மாணவர்களை வெட்ட முயற்சி நடந்துள்ளது.
த.வà¯.à®. à®à®à¯à®à®¿à®¯à®¿à®²à¯ மினà¯à®µà¯à®à¯à®à¯ மிà®à¯à®à¯à®®à¯ à®à®³à®µà¯à®à¯à®à¯à®¤à¯ தலà¯à®¤à¯à®à¯à®à¯à®®à¯ à®à®°à®¿à®µà®¾à®³à¯ வà¯à®à¯à®à¯
— M.K.Stalin (@mkstalin) October 7, 2026
à®à®à¯à®à®®à¯ à®à®´à¯à®à¯à®à¯ à®à¯à®°à®´à®¿à®¨à¯à®¤à¯ à®à®°à®¤à¯à®¤à®à¯ à®à®à®¤à®¿à®¯à®¿à®²à¯ à®à®¿à®à¯à®à®¿à®¯à¯à®³à¯à®³ தமிழà¯à®¨à®¾à®à¯
à®à¯à®±à¯à®±à®µà®¾à®³à®¿à®à®³à¯ தà¯à®°à®¿à®¯à®®à®¾à®à®µà¯à®®à¯ பà¯à®¤à¯à®®à®à¯à®à®³à¯ à®à®à¯à®à®¤à¯à®¤à¯à®à¯à®®à¯ வாழà¯à®®à¯ à®à¯à®´à®²à¯à®à¯à®à¯à®¤à¯ தமிழà¯à®¨à®¾à®à¯ தளà¯à®³à®ªà¯à®ªà®à¯à®à¯à®³à¯à®³à®¤à®±à¯à®à¯à®à¯ à®à®¾à®©à¯à®±à®¾à® à®à®à®¨à¯à®¤ 24 மணி நà¯à®°à®¤à¯à®¤à®¿à®²à¯â¦ pic.twitter.com/z1kFcUHl2K
வடக்கு, தெற்கு, மேற்கு, தலைநகர் என எல்லா திசைகளிலும் குற்றச் சம்பவங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. பட்டப்பகல், நள்ளிரவு எனப் பாகுபாடு இல்லாமல் தமிழ்நாடு இரத்தத்தில் தோய்ந்து போயுள்ளது. வீட்டிலும் பாதுகாப்பில்லை, வெளியிலும் பாதுகாப்பில்லை என்ற நிலையில் மக்கள் பரிதவித்துக் கிடக்கின்றனர்.
காவல்துறையினரால் ரோந்துப் பணி மேற்கொள்ளப்படுகிறதா இல்லையா?
சிங்கப்பெண் அதிரடிப்படையினர் ரீல்ஸ் போடுவதில் காட்டும் ஆர்வத்தைப் பெண்களின் பாதுகாப்பில் காட்டுவார்களா மாட்டார்களா?
காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் புகார் தெரிவித்தவர்களே கொலைக்கு உள்ளாகும் அராஜகத்துக்கு முடிவு எப்போது?
குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா?
கண்காணிப்பு இல்லாமல் போனதைத்தானே திண்டுக்கல் மாவட்டக் கொலைச் சம்பவம் காட்டுகிறது?
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நாளாக, நாளாக மிக மிக ஆபத்தான கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மக்களின் உயிரைக் காப்பதில் கவனம் செலுத்த வேண்டிய முதலமைச்சரின் கவனம் மொத்தமும் தனது நாற்காலியைக் காப்பாற்றுவதிலேயே இருக்கிறது.
அதற்கான விலையாக அப்பாவி மனித உயிர்கள் பலி கொடுக்கப்பட்டு வருகின்றன. காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதல்வர் நிலைமையின் வீரியத்தை உணர வேண்டும். சாக்கு போக்கு சொல்லித் தப்பிக்கும் காலம் எல்லாம் கடந்துவிட்டது. 'Take - Action' ShootingMode-இல் இருந்து விடுபட்டு, Please Take Action CM Sir!” எனப் பதிவிட்டுள்ளார்.
Summary
M.K. Stalin has condemned the deterioration of law and order, stating that sickle attacks are becoming even more rampant than power cuts.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






