சைபர் குற்றங்களில் இருந்து தற்காத்துக் கொள்ள! 5 முக்கிய பழக்கங்கள்காந்தி நினைவிடத்தில் அமர்ந்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் தர்னா!தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!

அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க நடவடிக்கை கைவிடப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சி.வி. சண்முகம் தாக்கல் செய்த மனு விசாரணை குறித்து...

Supreme Court

உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :

அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க நடவடிக்கை கைவிடப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சி.வி. சண்முகம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு மீது நாளை (அக். 9) விசாரிக்கப்படவுள்ளது.

தவெக ஆட்சியமைப்பதற்கான நம்பிக்கைத் தீர்மானத்தில் அதிமுக கொறடாவின் உத்தரவையும் மீறி, தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து 25 அதிமுக எம்எல்ஏ-க்கள் வாக்களித்தனர். கொறடாவின் உத்தரவை மீறியதாக, இந்த 25 எம்எல்ஏ-க்களின் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பேரவைத் தலைவரிடம் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த 25 பேரில் 4 பேர், எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டனர். மீதமுள்ள 21 பேரும் மன்னிப்புக் கடிதம் அளித்ததால், அவர்களுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை மனு திரும்பப் பெறப்பட்டது. இதனையடுத்து, 21 பேர் மீதான தகுதிநீக்க நடவடிக்கை கைவிடப்படுவதாக பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.

இருப்பினும், தகுதிநீக்க நடவடிக்கை கைவிடப்படுவதை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் பி.வி. செல்வகுமார் பொதுநல மனு தாக்கல் செய்தார். இருப்பினும், பி.வி. செல்வகுமாரின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்திலும் பி.வி. செல்வகுமார் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏ-க்கள் 21 பேர் தகுதிநீக்க நடவடிக்கை கைவிடப்படுவதற்கு எதிராக செல்வகுமார் தாக்கல் செய்த மேல்முறையீடு மீது உச்ச நீதிமன்றத்தில் நாளை (அக். 9) விசாரணை நடத்தப்படுகிறது.

இதனிடையே, இடைத்தேர்தல் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நாளைதான் வாக்குகள் எண்ணப்படவிருக்கின்றன.

Summary

Disqualification of AIADMK MLAs: Hearing in Supreme Court tomorrow

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.