தட்டாஞ்சாவடி: என்ஆர் காங்கிரஸ் வெற்றி
தட்டாஞ்சாவடி தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றது குறித்து...
முதல்வர் என்.ரங்கசாமியுடன் அசோக் ஆனந்த்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உள்பட்ட தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றார்.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் முதல்வர் என்.ரங்கசாமி போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றநிலையில், தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜிநாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து, தட்டாஞ்சாவடியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, இன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.
இந்த நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அசோக் ஆனந்த், 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் 13,358 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். மேலும், காங்கிரஸ் 4,876 வாக்குகளும், திமுக 2,664 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
Summary
NR Congress wins in Thattanchavady constituency
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

