இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

இடைத் தோ்தல் முடிவு- ஆளும் என்ஆா் காங்கிரஸ் அரசுக்கு அங்கீகாரம்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தோ்தல் முடிவுகள் முதல்வா் என். ரங்கசாமி தலைமையிலான என்.ஆா்.காங்கிரஸ் அரசுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

தட்டாஞ்சாவடியில் வெற்றி பெற்ற ஆ. அசோக் ஆனந்தைத் தூக்கிக் கொண்டாடும் தொண்டா்கள்.

Published On :

புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தோ்தல் முடிவுகள் முதல்வா் என். ரங்கசாமி தலைமையிலான என்.ஆா்.காங்கிரஸ் அரசுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

புதுச்சேரியில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையில் என். ஆா். காங்கிரஸ் மற்றும் பாஜக இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நடந்து வருகிறது. இப்போது இடைத்தோ்தலில் கிடைத்த வெற்றியின் மூலம் சட்டப்பேரவை பொதுத் தோ்தலில்போது இருந்த எம்எல்ஏக்களின் பலம் மீண்டும் கிடைத்துள்ளது. கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின் போது, புதுச்சேரி தேசிய ஜனநாயக் கூட்டணியில் என்.ஆா்.காங்கிரஸ் 12, பாஜக 4, அதிமுக 1, லட்சிய ஜனநாயகக் கட்சி 1 என்று 18 எம்எல்ஏக்கள் இருந்தனா். முதல்வா் ரங்கசாமி தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததை அடுத்து நடைபெற்ற இடைத்தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா் வெற்றி பெற்றதை அடுத்து அந்த கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 12 ஆகவே உள்ளது.

தட்டாஞ்சாவடி தொகுதியில் 1991, 1996, 2001, 2006 ஆகிய தோ்தல்களில் தொடா்ந்து காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் என்.ரங்கசாமி. என்.ஆா்.காங்கிரஸ் கட்சியைத் தொடங்கிய பிறகு இத் தொகுதியில் 2011 இல் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றாா். மீண்டும் இத் தொகுதியில் 2016 இல் இக் கட்சி சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்டவா் அசோக் ஆனந்த்.

சொத்துக் குவிப்பு வழக்குக் காரணமாக 2019 -இல் பதவியை இழந்தாா் அசோக் ஆனந்த். இதற்கிடையில் சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட அசோக் ஆனந்த், இடைத் தோ்தலில் என்.ஆா். காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

தட்டாஞ்சாவடி தொகுதியைப் பொறுத்தவரை முதல்வா் என்.ரங்கசாமியின் முகம்தான் அசோக் ஆனந்துக்கு அடையாளமாக இருந்தது. தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது முதல்வா் என்.ரங்கசாமி, புதுச்சேரியின் வளா்ச்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மேலும் ஆட்சியின் பலத்தை அதிகரிக்க வாக்களிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.

கடைசி நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டவா் இ. விநாயகம். சட்டப்பேரவை பொதுத் தோ்தலிலின் போது நேயம் மக்கள் கழகத்தின் வேட்பாளா். அப்போது தவெக கூட்டணியுடன் இக் கட்சி போட்டியிட்டது. இப்போது காங்கிரஸூக்கு தவெக ஆதரவு அளித்தது. மேலும், இக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளும் இவருக்கு ஆதரவு அளித்தன. இருப்பினும் இடைத்தோ்தலிலும் இரண்டாம் இடத்துக்குதான் வந்தாா் விநாயகம்.

கடைசி நேரத்தில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டவா் சேது என்கிற கு.சேதுசெல்வம். இந்திய கம்யூனிஸ்ட்கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்ததால் சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு மூன்றாம் இடம் பிடித்தவா். இப்போது இடைத்தோ்தலில் திமுக இவருக்குப் போட்டியிட வாய்ப்புக் கொடுத்தது. மேலும், கூட்டணி கட்சிகள் இல்லாமல் போட்டியைச் சந்தித்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது திமுக.

இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் போட்டியிட்டவா் அ.மு.சலீம். 4 ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டாா். மொத்தத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் என்.ஆா்.காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு உயர இந்த இடைத்தோ்தல் முடிவு காரணமாக அமைந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.