தட்டாஞ்சாவடி: என்ஆர் காங்கிரஸ் முன்னிலை; திமுக பின்னடைவு
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் முன்னிலை வகிப்பது குறித்து...
வாக்கு எண்ணிக்கை
புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உள்பட்ட தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இரண்டாவது சுற்றிலும் ஆளும் என்ஆர் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
புதுவை தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல வாக்கு எண்ணிக்கை லாஸ்பேட்டை மோதிலால் பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் ஆளும் என்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது.
இதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குகள் எண்ணப்பட்டு வரும்நிலையில் இரண்டாவது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன.
இரண்டாவது சுற்று முடிவில், என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் 6,885 வாக்குகளும், திமுக சேது செல்வம் 1,526 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் 2,366 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சலீம் 168 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஒரு வாக்கும், நோட்டாவுக்கு 106 வாக்குகளும் பெற்றுள்ளன.
Summary
Thattanchavady: NR Congress leads; DMK trails
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

