தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலைதட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்! தபால் வாக்குகளில் என்.ஆர். காங்கிரஸ் முன்னிலை!அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்! தபால் வாக்குகளில் என்.ஆர். காங்கிரஸ் முன்னிலை!

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் என்.ஆர். காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

தபால் வாக்கு

தபால் வாக்கு

Published On :

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உள்பட்ட தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் மொத்த தபால் வாக்குகள் 112. வீடுகளுக்கு சென்ற பெற்றவை 104. தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் பதிவானவை 5 வாக்குகள். சர்வீஸ் வாக்குகள் 3.

தபால் வாக்குளில் என்ஆர் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

புதுவை தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல வாக்கு எண்ணிக்கை லாஸ்பேட்டை மோதிலால் பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் - அசோக் ஆனந்த் - 65

காங்கிரஸ் வேட்பாளர் - விநாயகம் - 26

திமுக வேட்பாளர் சேது செல்வம் - 10

இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சலீம் - 3

நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திக் குமாரி - 1

செல்லாதவை- 8 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி அளவில் துவங்கியது. முன்னதாக ஸ்ட்ராங் ரூமில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு அங்கு அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மேஜைகளில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.

மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான குலோத்துங்கன் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூமில் இருந்து இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

தொடர்ந்து தற்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகின்றது. 8 மேஜைகள் அமைக்கப்பட்டு 4 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.