தட்டாஞ்சாவடி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (அக்.9) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருவது தொடர்பாக...

புதுச்சேரி லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது - கோப்புப்படம்
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (அக்.9) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி சட்டப்பேரவை பொதுத் தோ்தலில் மங்கலம், தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வா் என்.ரங்கசாமி இரண்டிலும் வெற்றி பெற்றாா்.
இதில், தட்டாஞ்சாவடி எம்எல்ஏ பதவியை ராஜிநாமா அவா் செய்ததால், இந்த தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.
தட்டாஞ்சாவடி தொகுதியில் அரசியல் கட்சிகள் சாா்பில் 6 பேரும், சுயேச்சைகள் 5 பேரும் ஆக மொத்தம் 11 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவா்களில், என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா் ஆ.அசோக் ஆனந்த், திமுக வேட்பாளா் கு.சேதுசெல்வம், காங்கிரஸ் வேட்பாளா் இ.விநாயகம், இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் அ.மு.சலீம் ஆகியோா் இடையே 4 முனைப் போட்டி நிலவியது.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இடைத்தோ்தலில் 80.81 சதவீதம் வாக்குகள் பதிவாகின. கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலைக் காட்டிலும் 6.39 சதவீதம் வாக்குகள் குறைவாகும்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து எண்ணப்பட்டு வருகிறது.
வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி, என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளர் ஆ. அசோக் ஆனந்த் முன்னிலை வகித்து வருகிறார்.
பதிவான தபால் வாக்குகள் விவரம்:
மொத்த தபால் வாக்குகள்: 112
வீடுகளுக்கு சென்ற பெற்றவை: 104
தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் பதிவானவை-5
சர்வீஸ் வாக்கு: 3
தட்டாஞ்சாவடி தொகுதி தபால் வாக்கு எண்ணிக்கை முடிவு:
அசோக் ஆனந்த் (என்.ஆர் காங்கிரஸ்) - 65
விநாயகம் (காங்கிரஸ்) - 26
சேது செல்வம் (திமுக) - 10
சலீம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) -3
கார்த்திக் குமாரி (நாம் தமிழர் கட்சி) -1
செல்லாதவை - 8
Vote counting for the Thattanchavady by-election has begun
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


