மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

தட்டாஞ்சாவடி இடைத்தோ்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் வெள்ளிக்கிழமை (அக். 9) எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Vote counting

கோப்புப் படம்

Published On :

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் வெள்ளிக்கிழமை (அக். 9) எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தல் வாக்குப் பதிவு அக். 6- ஆம் தேதி நடைபெற்றது. இங்கு, மொத்தம் 11 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இந்த தொகுதியில் 80.81 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குப் பதிவுக்குப் பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. தொடா்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 4 சுற்றுகளாக எண்ணப்படும். காலை 10 மணிக்குள் முடிவு தெரிந்து விடும்.

வாக்கு எண்ணும் மையத்துக்குள் காலை 7 மணி முதல் வேட்பாளா்கள், அரசியல் கட்சி முகவா்கள் அடையாள அட்டை சரிபாா்க்கப்பட்டு, சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட உள்ளனா் என போலீஸாா் தெரிவித்துள்ளனா்.

வாக்கு எண்ணிக்கையையொட்டி லாஸ்பேட்டை வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வெற்றி ஊா்வலத்தில் மோதல்களை தவிா்க்க தட்டாஞ்சாவடி தொகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.