தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலை
தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலை

முதல்வர் விஜய்யுடன் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா.
தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்துக்கு உள்பட்ட தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தொடக்கம் முதலே தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலையில் உள்ளார்.
தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்ட முதல் சுற்றிலிருந்தே தொடர்ந்து சத்யபாமா முன்னிலையில் உள்ளார்.
தற்போது மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு உடனுக்குடன் முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்டு வருகிறது.
காலை 9 மணி நிலவரப்படி தவெக வேட்பாளர் சத்யபாமா 342 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் சுகன்யா 235 வாக்குகளும் அதிமுக வேட்பாளர் பானுமதி 215 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி 107 வாக்குகள் வித்தியாசத்தில் சத்யபாமா முன்னிலையில் உள்ளார். இடைத்தேர்தலில் 1,79,337 வாக்குகள் பதிவான நிலையில் கடந்த பொதத் தேர்தலை விட குறைவான வாக்குகள் பதிவானதாக விமர்சனங்கள் எழுந்தன. தாராபுரம் இடைத்தேர்தலில் 80.30 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

