தாராபுரம் இடைத்தேர்தல் 13-வது சுற்று முடிவுகள்! வெற்றியை நோக்கி சத்யபாமா!
தாராபுரம் இடைத்தேர்தல் 13-வது சுற்று முடிவுகள் வெளியாகியிருக்கிறது.

தாராபுரம் இடைத்தேர்தல்
தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், 13வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன.
13வது சுற்று முடிவில் கிட்டத்தட்ட 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலையில் உள்ளார்.
13வது சுற்று முடிவுகள்
1.சத்தியபாமா (த.வெ.க.) - 37,944
2. பானுமதி (அதிமுக) - 26,266
3. சுகன்யா (திமுக) - 31,043
4. கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) - 3,093
5. லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) 681
வாக்கு வித்தியாசம் - 6,901 வாக்குகள் த.வெ.க முன்னிலையில் உள்ளது.
தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணத் தொடங்கி தற்போது 13வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன.
முதல் சுற்றில் தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலையில் இருந்த நிலையில், இரண்டாவது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலைக்கு வந்தார். பிறகு, ஐந்தாம் சுற்றிலிருந்து தவெக வேட்பாளரே தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
தாராபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல் வாக்குப் பதிவு கடந்த அக்டோபா் 6-ஆம் தேதி நடைபெற்றது. 320 வாக்குச் சாவடி மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையமான திருப்பூா் எல்ஆா்ஜி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது.
இன்று காலை வாக்குகள் எண்ணும் பணிக்காக அவை வாக்கு எண்ணும் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

