தங்கம் விலை உயர்ந்தது! இன்றைய நிலவரம்! (அக். 9)தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலைதட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்! தபால் வாக்குகளில் என்.ஆர். காங்கிரஸ் முன்னிலை!அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்

தாராபுரம் இடைத்தேர்தல்! 2ஆம் சுற்றில் அதிமுக முன்னிலை!

தாராபுரம் இடைத்தேர்தல் 2ஆம் சுற்றில் அதிமுக முன்னிலையில் உள்ளது.

அதிமுக வேட்பாளா் பானுமதி

Published On :

தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரத்தில் அ.தி.மு.க முன்னிலைக்கு வந்துள்ளது.

2ஆம் சுற்றில் த.வெ.க வேட்பாளரை பின்னுக்கு தள்ளி அ.தி.மு.க. வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். 2ஆம் சுற்று இறுதியில் தாராபுரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி - 6,506 வாக்குகளும் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா 6,456 வாக்குகளும் பெற்றிருந்தார். வெறும் 50 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.

2ஆம் சுற்று முடிவில் தாராபுரத்தில் தி.மு.க. வேட்பாளர் 4,995 வாக்குகள் பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டத்துக்கு உள்பட்ட தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தொடக்கத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலையில் இருந்தார். பிறகு முன்னிலை நிலவரம் மாறியிருக்கிறது.

தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்ட முதல் சுற்றிலிருந்தே தொடர்ந்து சத்யபாமா முன்னிலையில் இருந்த நிலையில் 2ஆம் சுற்றில் போக்கு மாறியது.

தற்போது மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு உடனுக்குடன் முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்டு வருகிறது.

9.30 மணி நிலவரப்படி, தாராபுரத்தில் அதிமுக முன்னிலையில் உள்ளது. தவெக இரண்டாம் இடத்தில் உள்ளது.

இடைத்தேர்தலில் 1,79,337 வாக்குகள் பதிவான நிலையில் கடந்த பொதத் தேர்தலை விட குறைவான வாக்குகள் பதிவானதாக விமர்சனங்கள் எழுந்தன. தாராபுரம் இடைத்தேர்தலில் 80.30 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.

தாராபுரம் இடைத்தேர்தல் 2வது சுற்று

1.சத்தியபாமா (த.வெ.க.) - 4981

2. பானுமதி (அதிமுக) - 5573

3. சுகன்யா (திமுக) - 4016

4. கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) - 352

5. லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) 107

வாக்கு வித்தியாசம்.592 வாக்குகள் அதிமுக முன்னிலை

தாராபுரம் இடைத்தேர்தல் முதல் சுற்று

1. சத்தியபாமா (த.வெ.க.) - 2634

2. பானுமதி (அதிமுக) - 2639

3. சுகன்யா (திமுக) - 2019

4. கார்த்திகா (நாம் தமிழர் கட்சி) - 168

5. லட்சுமணன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) 70

வாக்கு வித்தியாசம்.5 வாக்குகள் அதிமுக முன்னிலை

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER