தாராபுரம் மீண்டும் மாறிய நிலவரம்! சத்யபாமா முன்னிலை!
தாராபுரம் மீண்டும் மாறிய நிலவரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலையில் உள்ளார்.

முதல்வர் விஜய்யுடன் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமா.
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டுவரும் நிலையில், ஐந்தாம் சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது திடீரென நிலவரம் மாறியது.
இரண்டாம் சுற்று முதல் தவெக வேட்பாளர் சத்யபாமாவை பின்னுக்குத் தள்ளி அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலைக்கு வந்திருந்தார்.
நான்காம் சுற்று வரை இந்த நிலவரம் இருந்த நிலையில், ஐந்தாம் சுற்று நிலவரம் வெளியான போது மீண்டும் தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலைக்கு வந்துள்ளார்.
ஐந்தாம் சுற்றில், தவெக வேட்பாளர் சத்யபாமா - 13213 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் பானுமதி 12,489 வாக்குகளும், திமுக வேட்பாளர் 11554 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு வெளியான போது சத்யபாமா முன்னிலையில் இருந்த நிலையில், ஐந்தாம் சுற்றிலிருந்து மீண்டும் தவெக முன்னிலைக்கு வந்துள்ளது.
10.46 மணி நிலவரப்படி தாராபுரத்தில் தவெக முன்னிலையில் உள்ளது. அதிமுக இரண்டாம் இடத்தில் உள்ளது.
இடைத்தேர்தலில் 1,79,337 வாக்குகள் அதாவது 80.30 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

