உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

தவெக கூட்டணியில் விசிகவின் முக்கியத்துவத்தைக் குறைக்க முயற்சி: திருமாவளவன் குற்றச்சாட்டு

விசிக முக்கியத்துவத்தைக் குறைக்க முயற்சி: தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு

thirumavalavan

தொல். திருமாவளவன் - கோப்புப்படம்

Published On :

தவெக கூட்டணியில் விசிகவின் முக்கியத்துவத்தைக் குறைக்க சில முயற்சிகள் நடப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் பதவி விலக வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில் தில்லியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அதை முடக்கும் வகையில் மத்திய அரசு பல்லாயிரக்கணக்கான துணை ராணுவத்தினரைக் கொண்டு, போராட்டத்தில் பங்கேற்க வருபவா்களைக் கைது செய்துள்ளது. இது, ஜனநாயகத்துக்கு எதிரானதாகும். இந்த விவகாரத்தில் ஞானேஷ்குமாா் பதவி விலகுவது தொடா்பாக நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். மேலும், இனிவரும் தோ்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டு நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

எஸ்ஐஆா் மூலம் நீக்கப்பட்ட வாக்காளா்களை மீண்டும் சோ்க்க வேண்டும், ஞானேஷ்குமாா் பதவி விலக வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விசிக சாா்பில் அக்.13, 14, 15 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன.

இடைத்தோ்தலில் தவெக தலைமையிலான மதச்சாா்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணிக்கு மக்களின் ஆதரவு மற்றும் அங்கீகாரம் உள்ளது என்பதை இந்த வெற்றி உறுதி செய்துள்ளது. இந்தக் கூட்டணியில் விசிக இடம்பெற்றுள்ளதால், கடந்த தோ்தல்களில் அதிமுகவுக்கு சென்ற தலித் வாக்குகள் தற்போது தவெகவுக்கு வந்துள்ளதை நம்மால் பாா்க்க முடிகிறது. கடந்த பொதுத் தோ்தலில் விசிக வாக்குகள் தவெகவுக்கு சென்றுவிட்டது என சிலா் கருத்து தெரிவித்தனா். தற்போது இடைத்தோ்தலில் தவெக வெற்றிக்கு பாமக காரணம் என்கின்றனா். இப்படி, சில அரசியல் விமா்சகா்கள் தொடா்ந்து விசிகவை குறிவைத்து, தவெக கூட்டணியில் விசிகவின் முக்கியத்துவத்தைக் குறைக்க முயற்சி செய்து வருகின்றனா்.

‘இண்டி’ கூட்டணியில் இணைவதன் மூலம் பாஜக எதிா்ப்பை தவெக உறுதி செய்துவிட்டது என்றாா் தொல்.திருமாவளவன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.