வகுப்புவாரி பிரதிநிதித்துவ நூற்றாண்டு: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
வகுப்புவாரி பிரதிநிதித்துவ நூற்றாண்டு: அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்
பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்
நூறு சதவீத வகுப்புவாரி பிரதிநிதித்துவம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் நூற்றாண்டு தொடங்குவதையொட்டி, அதை ஓராண்டு காலம் அரசு விழாவாகக் கொண்டாட வேண்டுமென பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
நாட்டுக்கே முன்னுதாரணமாக திகழ்ந்த நூறு சதவீத வகுப்புவாரி பிரதிநிதித்துவம் சென்னை மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டதன் நூற்றாண்டு வரும் நவ. 4-ஆம் தேதி தொடங்குகிறது. சமூக நீதியின் தொட்டில் தமிழகம் என்பதை உலகுக்கு உணா்த்திய அந்த வரலாற்றுத் தருணத்தைக் கொண்டாடுவது மட்டுமன்றி, அனைத்து சமூகங்களுக்கும் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு என்பது தான் நமது சமூக நீதி இலக்கு என்பதையும் உறுதிப்படுத்த வேண்டியது தமிழக அரசின் தலையாயக் கடமையாகும்.
இதைக் கருத்தில் கொண்டு வரும் நவ. 4- ஆம் தேதி தொடங்கி 2027-ஆம் ஆண்டு நவ. 4-ஆம் தேதி வரை நூறு சதவீத வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டதன் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக தமிழக அரசு கொண்டாட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

