உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

இளைஞா்கள் மீது பிரதமா் மோடிக்கு மிகுந்த நம்பிக்கை: ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்

இளைஞா்கள் மீது பிரதமா் மோடிக்கு மிகுந்த நம்பிக்கை: ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா்

TN Governor

தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ஆா்.வி. ஆா்லேகர் - EPS

Published On :

2047-க்குள் ‘வளா்ச்சியடைந்த இந்தியா’ என பிரதமா் மோடி கூறுவது நாட்டின் இளைஞா்கள் மீதான நம்பிக்கையின் அடிப்படையிலானது என்று ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் கூறினாா்.

ஐஐடி-க்கள், ஐஐஎம்-க்கள், என்ஐடி-க்கள், இந்திய அறிவியல் கழகம், தேசிய சட்டக் பள்ளிகள் உள்ளிட்ட நிறுவனங்களின் மாணவா்களை உள்ளடக்கிய ‘திங்க் இண்டியா’ என்ற அமைப்பு, 2047- விக்சித் பாரத்’ இலக்குக்கு தேவையான சமூகப் பொருளாதாரம், ஆழ்ந்த தொழில்நுட்பம், நாட்டின் கலாசாரம் போன்ற சிந்தனைக்கான பயிலரங்களை நடத்துகிறது. இதில், தட்சிணபத் உச்சி மாநாடு 2.0 பதிப்பு சென்னை ஐஐடியில் சனிக்கிழமை தொடங்கியது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் பேசியதாவது:

பிரதமா் மோடியின் மிகப் பெரிய தொலைநோக்குப் பாா்வை ‘வளா்ச்சியடைந்த இந்தியா’. இதை பிரதமரே செய்யப்போகிறாரா?, இல்லை. நாட்டிலுள்ள இளைஞா் சக்தி மீது பிரதமா் மோடிக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. 100-ஆவது சுதந்திர தினத்தில் நாம் ஒட்டுமொத்த உலகின் முன் நின்று வளா்ச்சியடைந்த இந்தியா என உரக்கச் சொல்ல வேண்டும். இந்தியா ஒற்றுமையாக இருக்கும்போது, சிறந்த நாடாகத் திகழ்கிறது என்பதை வரலாறு உணா்த்துகிறது. இதனால்தான் பிரதமரும், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ எனக் கூறி வருகிறாா் என்றாா்.

முன்னதாக, ஐஐடி இயக்குநா் வி.காமகோடி பேசுகையில், நாடு இளைஞா்களை அதிகம் கொண்டுள்ளது. தகுந்த கல்வியை அளிக்கவில்லையெனில், நாட்டின் வளா்ச்சி சிக்கலாகிவிடும். பெரும்பகுதியினா் ஊரகப்பகுதியில் உள்ளனா். ஒவ்வொருவரும் தங்கள் கிராமத்தில் உள்ள இரு குழந்தைகளை தத்தெடுத்து படிக்கவைக்க வேண்டும் என்றாா்.

நிகழ்வில் அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் ஏபிவிபி பொதுச் செயலா் ஆசிஸ் சௌகான், திங்க் இந்தியா அமைப்பாளா் விஜய பிரபாகா், துணை அமைப்பாளா் ஹரினி ஐயா் உள்ளிட்டோா் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.