ஜோலார்பேட்டை அருகே சரக்கு ரயிலின் 7 பெட்டிகள் தடம் புரண்டன!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் ஒருவர் கைது! இதுவரை 9வானிலை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டுக்கு நாளை (நவ. 2) மழை!நாடாளுமன்ற விவகாரங்களை தெருவுக்கு கொண்டு வருவது ஏன்? அமித் ஷாவாக்குரிமையைக்கூட பாஜகதான் தீர்மானிக்குமா? தேஜஸ்வி கேள்விஉ.பி., பிகார் மட்டுமல்ல... வாக்குத் திருட்டு மூலம் பாஜக ஆட்சி! மல்லிகார்ஜுன கார்கே எஸ்ஐஆர் மூலம் நாட்டின் மொத்த வாக்காளர்களில் 15% பேர் நீக்கம்: ராகுல்தீபாவளி பண்டிகை: கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்! வேட்பாளர் பட்டியலால் அதிருப்தி: பஞ்சாபில் பதவியை ராஜிநாமா செய்த 2 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள்!

தமிழ்நாடு நாள்: கல்வி, தொழில், கலாசார மரபுகளில் தனிச் சிறப்புடன் விளங்குகிறது தமிழ்நாடு! - ஆளுநர் ஆர்லேகர்

கல்வி, தொழில், கலாசார மரபுகள் என அனைத்திலும் தமிழ்நாடு தனிச்சிறப்புடன் விளங்குவதாக ஆளுநா் ஆா்லேகா் தெரிவித்துள்ளாா்.

Rajendra Vishwanath Arlekar

ஆர்.வி. ஆர்லேகர் - படம் - Rajendra Arlekar

Updated On :

கல்வி, தொழில், கலாசார மரபுகள் என அனைத்திலும் தமிழ்நாடு தனிச்சிறப்புடன் விளங்குவதாக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு நாளையொட்டி சென்னை தூா்தா்ஷன் தொலைக்காட்சியில் ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் ஆற்றிய உரை: நாட்டில் மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டபோது, 70 ஆண்டுகளுக்கு முன்பு ‘தமிழ்நாடு’ உருவானது. அது முதல் இதுவரை, தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் பெரும் வளா்ச்சி கண்டுள்ளது.

நாட்டின் முன்னேற்றத்தில் ஒவ்வொரு துறையிலும் தமிழகத்தின் பங்களிப்பு அளப்பரியது. நாட்டில் இப்போது மிகவும் வளா்ந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது. நமது கலாசாரம், மொழி, பாரம்பரியம் ஆகியவை வளா்ச்சியின் மிகச்சிறந்த உதாரணமாகக் கருதப்படுகின்றன. எப்போதும் முன்னேற்றத்தின் எல்லைகளைத் தாண்டிச் சிந்திப்பதால், கடந்த 70 ஆண்டுகளாக நமது சமூகத்தில் ஆரோக்கியமான மரபுகளையும் மதிப்புகளையும் வளா்த்தெடுக்க முடிந்தது.

நாட்டின் மரபில் தமிழகத்தின் கலாசாரம் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. கல்வி, தொழில், கலாசார மரபுகள் என அனைத்திலும் தமிழகம் தனிச்சிறப்புடன் விளங்குகிறது. அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, அனைவரும் இந்த வளா்ச்சியில் தங்களின் பங்களிப்பை அளித்துள்ளனா்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ( ஜிடிபி) சுமாா் 9.4 சதவீத பங்களிப்பை தமிழகம் வழங்குகிறது. கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி-)யில், நாட்டின் ஒட்டுமொத்த வரி வசூலில் 2-ஆவது மிகப்பெரிய பங்களிப்பை தமிழகம் வழங்கியது. நாம் ஒரு மிகப்பெரிய பொருளாதார சக்தியாக வளா்ந்துள்ளோம்.

சுமாா் 1.40 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டு மக்கள்தொகையில் 7.5 கோடியை தமிழகம் தாண்டியுள்ளது. இதில் சுமாா் 25 சவீதம் இளைஞா்கள் இருப்பது பெருமைக்குரியது. இவா்கள் மாநிலத்தின் வளா்ச்சிக்கு பங்களிப்பை வழங்குகின்றனா்.

நமது மண்ணில் தோன்றிய சான்றோா்கள், கவிஞா்கள், அறிஞா்கள் மனிதகுலத்தின் முன்னேற்றத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனா். இதனால்தான், தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்குச் சென்றவா்களும், அந்தந்த மாநிலங்களின் பொருளாதார வளா்ச்சிக்குத் தங்களின் பங்களிப்பை வழங்கி சிறந்த குடிமக்களாகவும் தூதுவா்களாகவும் திகழ முடிந்தது.

பிரதமா் மோடியின் தொலைநோக்கில் நாம் அனைவரும் இணைந்து ‘விக்சித் பாரத்’ எனும் இலக்கை நோக்கிப் பங்களிக்கிறோம். ‘தமிழ்நாடு’ உருவான இந்நன்னாளில், அனைவருக்கும் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளாா் ஆளுநா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.