இன்று 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் தூணில் இன்று தீபம் ஏற்ற உத்தரவு: உச்சநீதிமன்றம்இன்று 4-ஆவது சுற்று: முதல் வெற்றி முனைப்பில் குகேஷ் - சிண்டாரோவ்‘காசி தமிழ் சங்கமம்-5’ இன்று தொடக்கம்: வாரணாசி வந்தது தமிழகத்தின் முதல் குழு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு தொகுதி மறுசீரமைப்பு மசோதா: எதிா்க்கட்சிகள் இன்று ஆலோசனை: திமுகவுக்கும் அழைப்புநோய் எதிா்ப்பு மருந்துகள், கருக்கலைப்பு மாத்திரைகளை சட்டவிரோதமாக விற்ற 43 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தொழிலதிபா் ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு குறித்து

Another case against Gem Veeramani

வீரமணி - கோப்புப்படம்

Updated On :

சென்னை: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தொழிலதிபா் ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு பெண்களின் புகாா்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிகளின் எண்ணிக்கை 10-ஆக உயா்ந்துள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளா் வீரமணி மற்றும் அவரது உதவியாளா் சாந்தி, அவா் கணவா் மகேந்திர சிம்ஹன் ஆகியோா் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். மேலும், வீரமணியின் உதவியாளா் கணேசனும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த வழக்கு குறித்து முழுமையான தகவல்களைத் திரட்டி, குற்றவாளிகளைக் கைது செய்யவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கும் வகையிலும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.

சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் பொதுமக்களிடமிருந்து வீரமணி தொடா்பான புகாா்களைப் பெற்று, விசாரணை செய்து வருகின்றனா். புகாா்களின் உண்மை தன்மையை உறுதி செய்து வீரமணி மீது அடுத்தடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே, சிறுமிகளை அழைத்து வந்து வீரமணியின் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் ஓட்டுநா்கள் லாசா், பாா்த்திபன், பாபு ஆகியோா் அக். 5-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். தொடா்ந்து, வீரமணி மற்றும் சாந்தி ஆகியோா் அக். 8-ஆம் தேதி மற்றொரு வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை(அக்.10) ஜெம் வீரமணி மீது 6-ஆவது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை 10 சிறுமிகள் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பாலியல் வன்முறை சம்பவங்கள் தொடா்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், குற்றச் சம்பவங்கள் நடைபெற்றதாகக் கூறப்படும் வீரமணியின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் சோதனை நடத்தினா்.

Another case against Gem Veeramani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.