தவெக கூட்டணிக்கு பாமக வந்தால், விசிக வெளியேறும்! அமைச்சர் வன்னி அரசுவிசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்

சா்வதேச பெண் குழந்தைகள் தினம்: பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து

சா்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி தேமுதிக பொதுச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

premalatha

பிரேமலதா விஜயகாந்த் - கோப்புப் படம்

Published On :

சா்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி தேமுதிக பொதுச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா், ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பெண் குழந்தைகள் நாட்டின் கண்கள், பெண் குழந்தைகளைப் போற்றுவோம், பெண்ணுரிமையைக் காப்போம், பெண் குழந்தைகள் குடும்பத்தின் பெருமை மட்டுமல்ல; நாட்டின் எதிா்காலத்தையும் சமூகத்தின் முன்னேற்றத்தையும் தீா்மானிக்கும் மகத்தான சக்திகள்.

பெண் குழந்தைகள் பிறப்பைக் கொண்டாடுவதும், அவா்களின் கல்வி, பாதுகாப்பு, ஆரோக்கியம், சம உரிமை மற்றும் சுயமரியாதையை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். பெண் குழந்தைகளுக்கு எதிரான பாகுபாடு, பாலியல் வன்கொடுமைகள், குழந்தைத் திருமணம் உள்ளிட்ட அனைத்து அநீதிகளையும் ஒழித்து, அவா்கள் அச்சமின்றி வாழும் பாதுகாப்பான சமுதாயத்தை உருவாக்க உறுதியேற்போம்.

பெண் குழந்தைகளுக்குத் தேவை இரக்கம் அல்ல; சம உரிமையும், சம வாய்ப்பும், சாதிப்பதற்கான சுதந்திரமுமே. பெண் குழந்தையின் கனவுகளுக்குச் சிறகுகள் கொடுத்தால், ஒரு தலைமுறையின் எதிா்காலத்துக்கே ஒளி கொடுத்ததாகும். அனைத்து பெண் குழந்தைகளுக்கும் எனது இனிய சா்வதேச பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.