விசிக கூட்டணியைத் தக்கவைத்த திமுக விரும்பவில்லை: திருமாவளவன்எரிபொருள் போர்நிறுத்தம் அறிவிப்பு: உக்ரைன் - ரஷியா மீற வேண்டாம்! டிரம்ப் எச்சரிக்கைஎங்கள் செல்போன்களை பறித்தது காவல் துறை; ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் - சிஜேபி செளரவ் தாஸ்தில்லியில் தொடரும் சிஜேபி போராட்டம்: எம்பி ஜான் பிரிட்டாஸ் உட்பட 100 பேர் கைது! நாளை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! நாட்டில் 1300க்கும் அதிகமான பல்கலை., 5000க்கும் அதிகமான கல்லூரிகள்: பிரதமர் மோடிமத்திய - மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும்: முதல்வர் விஜய்கருணாநிதி, ஜெயலலிதா முதல் விஜய் வரை... தமிழ்நாட்டோடு தொடரும் பயணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி உரை! 1.5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சியை நோக்கி தமிழக அரசு செயல்படுகிறது: முதல்வர் விஜய்அமைதியான முறையில் கூடுபவர்களுக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கை கூடாது: உச்ச நீதிமன்றம்சென்னை ஐஐடி ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் சாமி தரிசனம்! குழந்தைகள் நாள்: பள்ளி மாணவர்களுக்கு கேக் வழங்க ஏற்பாடு!சௌதி அரேபிய விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

உலகளாவிய புதிய சவால்களுக்கு இந்திய இளைஞர்களால் தீர்வு காண முடியும்: பிரதமர் மோடி நம்பிக்கை

உலகளாவிய புதிய சவால்களுக்கு இந்தியாவின் இளைஞர்களால் தீர்வு காண முடியும் மோடி பேசியிருப்பது குறித்து...

Modi Says India’s Youth Can Provide Solutions to Emerging Global Challenges

பிரதமர் நரேந்திர மோடி - டிஎன்எஸ்

Published On :

சென்னை: உலகம் புதிய சவால்களுக்கான தீர்வுகளைத் தேடிக்கொண்டிருக்கிறது என்றும், அத்தகைய சவால்களுக்கு தீர்வு காணுவதற்கான திறனும் ஆற்றலும் இந்திய இளைஞர்களிடம் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற ஜெய்கோபால் கரோடியா பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, வளர்ச்சியடைந்த இந்தியா 2047 ('விக்சித் பாரத்') என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் இளைஞர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள் என்று வலியுறுத்தினார். "இளைஞர்களுக்கு இந்தியா ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது" என்றும், இளைஞர்கள் தங்கள் ஆற்றலை உணர்ந்து நாட்டின் வளர்ச்சிக்குத் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உலகின் எதிர்காலத்தை வடிவமைக்கும்

இளைஞர்களால் உருவாக்கப்படும் புதுமையான யோசனைகளும் தீர்வுகளும் இந்தியாவின் எதிர்காலத்தை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகின் எதிர்காலத்தையும் வடிவமைக்கும் என்று அவர் உறுதியாகக் கூறினார். கூட்டு முயற்சிகள் மூலம் நாட்டின் லட்சியங்களை அடைய முடியும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்திய இளைஞர்களிடமும் உள்ளது

இன்று உலகம் பல்வேறு புதிய சவால்களுக்கான தீர்வுகளைத் தேடிக்கொண்டிருக்கிறது என்றும், அத்தகைய சவால்களுக்கு தீர்வு காணுவதற்கான திறனும் ஆற்றலும் இந்திய மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் உள்ளது. இது உங்களுக்கான நேரம், இது உங்களுக்கான வாய்ப்பு என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

பொறியியல் துறை ஏற்றுமதி புதிய உச்சம்

நாட்டின் உற்பத்தித் துறை வளர்ச்சியைச் சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இந்த துறையின் விரிவாக்கம் இளைஞர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கப்பட்டுள்ளன. நாட்டின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி 50 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், பொறியியல் துறை ஏற்றுமதி புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்துள்ளது என்று கூறிய பிரதமர், 2014-ஆம் ஆண்டு முதல் மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி 11 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

மெட்ரோ ரயில் சேவைகளின் விரிவாக்கம் குறித்தும் பேசிய பிரதமர் மோடி, மெட்ரோ இணைப்பு கொண்ட நகரங்களின் எண்ணிக்கை 2014-ல் ஐந்தாக இருந்த நிலையில், தற்போது 25-ஆக அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டார்.

இணைந்து பணியாற்றுவேன்

தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்துப் பேசிய பிரதமர், அரசுகள் மாறலாம், ஆனால் மாநிலத்தின் முன்னேற்றம் மற்றும் மக்களின் நலன் மீதான தனது அர்ப்பணிப்பு மாறாமல் உறுதியாக இருக்கும் என்று கூறினார்.

மாநிலத்தின் வளர்ச்சிப் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல முதல்வர் சி. ஜோசப் விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

உறுதியான மனப்பான்மை, வலுவான சேவை உணர்வு

இந்நிகழ்ச்சியில், 50 ஆண்டுகளை நிறைவு செய்து பொன்விழா காணும் ஜெய்கோபால் கரோடியா பள்ளிக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். 1975-ல் சென்னையின் மேற்கு மாம்பலம் பகுதியில் வெறும் ஏழு மாணவர்கள், குறைந்தபட்ச வசதிகள் மற்றும் நிரந்தரக் கட்டடம் இல்லாத சூழலில் ஒரு சிறிய பள்ளியாகத் தொடங்கப்பட்டதாக குறிப்பிட்ட மோடி, அதன் வளர்ச்சிக்கு உறுதியான மனப்பான்மையும், வலுவான சேவை உணர்வுமே காரணம் என்று அவர் பாராட்டினார்.

திருக்குறள் நல்ல வடிகாட்டி

வாழ்க்கை முழுவதும் புதிய பிதிய விஷயங்களை கற்க விரும்புவோருக்கு திருக்குறள் நல்ல வடிகாட்டி என்றார்.

கல்வித்துறையில் பெரிய வளர்ச்சி

2014-இல் நாட்டில் 750 பல்கலைக்கழகங்கள் இருந்தன. தற்போது 1300-க்கும் அதிகமாக உள்ளன. கல்லூரிகளின் எண்ணிக்கை 38 ஆயிரத்தில் இருந்து 52 ஆயிரத்துக்கும் அதிகமாகி உள்ளது.

விளையாட்டு உலகம் மாறி வருகிறது

வரவிருக்கும் ஆண்டுகளில் உலகின் பெரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் இந்தியாவில் நடக்கும். 2030 இல் காமன் வெல்த் போட்டிகளை நடத்தும் தயாரிப்புகளில் உள்ளது. 2036 இல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் கனவுகளை தாங்கி முன்னேறி வருகிறோம் என்று பிரதமர் தெரிவித்தார்.

தகவமைத்துக் கொள்ள வேண்டும்

இளைஞர்கள் தொடர்ந்து புதிய வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டும். நாட்டின் திறன் மேம்பாட்டு நிறுவனங்கள்(ஐஐடி) மற்றும் ஐஐஎம் போன்ற நிறுவனங்களுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தவை என்று சென்னை ஐஐடி நிகழ்ச்சியில் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Prime Minister Narendra Modi has said the world is looking for solutions to emerging challenges and expressed confidence that India’s youth have the talent and potential to provide them.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.