மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!தவெக ஆட்சியில் பணவீக்கம், விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம்: மு.க. ஸ்டாலின் கடும் தாக்கு!காஞ்சிபுரத்தில் இந்தியாவிலேயே சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம்! ஜனவரியில் திறந்து வைக்கிறார் முதல்வர்!ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசுமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்பு

வெளிச்சந்தையில் அதிக விலைக்கு மின் கொள்முதல்: பொதுமக்கள் மத்தியில் எழும் சந்தேகங்கள்! டிடிவி தினகரன்

வெளிச்சந்தையில் மின்சாரத்தை அதிக விலைக்கு கொள்முதல் விவகாரத்தில் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியிருப்பது பற்றி..

Purchasing electricity at high prices in the open market: Doubts raised among the general public! — T. T. V. Dhinakaran

டிடிவி தினகரன் - கோப்புப்படம்

Published On :

வெளிச்சந்தையில் மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்குவது பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ரூபாய் 35-க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை வெளிச்சந்தையில் வாங்க தமிழக மின்வாரியம் ஒப்பந்தம் – தவெகவின் இந்த ஒப்பந்தம், ”மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்” என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது.

கடந்த ஆட்சியில் அதிக ஊழலுக்கு வழிவகுத்த குறுகிய கால மின்சாரக் கொள்முதலைக் குறைத்து, மாதத்திற்கு சுமார் 200 கோடி ரூபாய் சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டுப் பேசிய எரிசக்தித்துறை அமைச்சர் நிர்மல்குமார், அதே குறுகிய காலக் கொள்முதல் நடைமுறையைப் பின்பற்றி, ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய் கொடுத்து அவசரகதியில் வாங்குவது, “மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்” என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது.

தமிழகம் முழுவதும் அன்றாடம் அரங்கேறும் மின்வெட்டைக் கண்டித்து, முதல்வரின் சொந்தத் தொகுதியான பெரம்பூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் வீதிக்கே வந்து போராடிய பின்னரும்கூட, மின் தட்டுப்பாடு இல்லை எனவும், எதிர்க்கட்சிகளின் சதிச்செயல் எனவும் ஆளுக்கொரு காரணத்தைச் சொல்லிக் கொண்டிருந்த அமைச்சர்கள், தற்போது அவசரகதியில் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டிய அவசியம் என்ன என்பதை விளக்குவார்களா?

அதிகப் பணத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவே மின்சாரம் வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கப்படுவதாகத் தேர்தல் பிரசாரத்தில் முழங்கிய தவெக தலைவர் ஜோசப் விஜய், முதல்வரான பின்பு அதே வெளிச்சந்தையில் மின்சாரத்தை அதிக விலைக்கு வாங்குவது பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

எனவே, தன் இயலாமையை மறைக்க, அவசரகதியில் வெளிச்சந்தையில் மக்கள் வரிப்பணத்தில் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதில் செலுத்தும் கவனத்தைத் தமிழகத்தின் மின் தட்டுப்பாட்டைப் போக்கவும், தடையற்ற மின்சாரத்தை விநியோகம் செய்திடவும் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்வதிலும் செலுத்திட வேண்டும் என மின்வாரியத்தையும் தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Summary

AMMK General Secretary T. T. V. Dhinakaran has stated that purchasing electricity at a high price in the open market has raised various doubts among the general public.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.