ஆயுதபூஜை விடுமுறை! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணமா? புகார் எண்!
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் தொடர்பாக புகார் அளிக்கலாம்...
ஆம்னி பேருந்துகள் - கோப்புப் படம்
ஆயுதப் பூஜை மற்றும் விஜயதசமி தொடர் விடுமுறையையொட்டி வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகளிடம் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற அக். 17 - 21 வரை வார இறுதி நாள்கள், ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி என தொடர்ந்து 4 நாள்கள் விடுமுறை வருவதால் அதிகளவிலான மக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்கள்.
பயணிகளின் வசதிகளுக்காக தமிழ்நாடு முழுவதும் ஆயுதபூஜையை முன்னிட்டு 8,390 சிறப்பு அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து மட்டும் 6,199 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள் வெளியூர்களுக்கு அதிகளவில் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி தனியார் ஆம்னி பேருந்துகள் வழக்கத்திற்கு மாறான அதிகப்படியான கட்டணம் வசூல் செய்தால் உடனே புகார் அளிக்க போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 6151 மூலமும், tc.tn@nic.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
à®à®®à¯à®©à®¿ பà¯à®°à¯à®¨à¯à®¤à¯à®à®³à®¿à®²à¯ à®à¯à®à¯à®¤à®²à¯ à®à®à¯à®à®£à®®à¯ வà®à¯à®²à®¿à®¤à¯à®¤à®¾à®²à¯ à®à®à®©à®à®¿à®¯à®¾à® பà¯à®à®¾à®°à¯ à®à¯à®¯à¯à®¯à¯à®à¯à®à®³à¯!
— TN DIPR (@TNDIPRNEWS) October 14, 2026
பà¯à®à®¾à®°à¯ à®à®£à¯: 1800 425 6151
மினà¯à®©à®à¯à®à®²à¯: tc.tn@nic.in@CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @TamilanParthib1 @arasubus @MtcChennai
#CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt⦠pic.twitter.com/f1JuhmGGsP
Summary
Ayudha Puja Holiday! Extra Fares on Omni Buses? Complaint Number!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


