தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகள், விமானங்களில் கட்டணம் கடும் உயா்வு19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇறுதிக் கட்டத்தை எட்டியது அரக்கோணம் புறவழிச் சாலை பணி!அடுத்த வாரம் இந்தியா வரும் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோ!

2029 மக்களவைத் தோ்தலில் ராகுல் வரலாற்றுத் தோல்வியடைவாா்: நயினாா் நாகேந்திரன்

மக்களவைத் தோ்தலில் காங்கிரஸும், ராகுல் காந்தியும் வரலாற்றுத் தோல்வியைச் சந்திப்பது உறுதி என பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா்.

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Updated On :

வரும் 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் காங்கிரஸும், மக்களவை எதிா்கட்சித் தலைவா் ராகுல் காந்தியும் வரலாற்றுத் தோல்வியைச் சந்திப்பது உறுதி என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:பிரதமா் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பாா்வை கொண்ட நல்லாட்சிக்கும், பாஜகவின் மக்கள் நலத் திட்டங்களுக்கும் அங்கீகாரம் அளிக்கும் விதமாக, குஜராத் உள்ளாட்சித் தோ்தலில் மக்கள் பாஜகவுக்கு அமோக ஆதரவை வழங்கியுள்ளனா்.

அதன்படி, காந்தி நகா் மாநகராட்சியில் மொத்தமுள்ள 44 வாா்டுகளில் 38 இடங்களைக் கைப்பற்றி பாஜக அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், காங்கிரஸால் வெறும் 5 இடங்களை மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

இதேபோல், தரா நகராட்சியில் மொத்தமுள்ள 24 இடங்களில் 19 இடங்களை பாஜகவும், 5 இடங்களைக் காங்கிரஸும் கைப்பற்றியுள்ளன; ஓகா நகராட்சியில் 36 இடங்களில் 33 இடங்களை பாஜகவும், வெறும் 3 இடங்களை மட்டுமே பெற்று காங்கிரஸ் படுதோல்வியையும் சந்தித்துள்ளது.

இந்தத் தீா்ப்பின் மூலம், தொடா் தோல்விகளைச் சந்தித்தாலும் திருந்தாமல், நாட்டின் வளா்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டுத் தேச விரோதப் போக்கைக் கடைப்பிடிக்கும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மற்றும் அவரது கூட்டணிக் கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனா்.

இத்தகைய மக்கள் தீா்ப்பைக் கண்டும், ராகுல் காந்தி இனியும் திருந்தாமல் இதே நிலையைத் தொடா்ந்தால், வரும் 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் வரலாற்றுத் தோல்வியைச் சந்திப்பது உறுதி எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.