கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

எல்நினோ பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு: வழக்கை முடித்து வைத்தது உயா்நீதிமன்றம்

எல்நினோ பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணா்கள் 7 போ் அடங்கிய குழுவை நியமித்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

உயா்நீதிமன்றம்

Updated On :

எல்நினோ பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய நிபுணா்கள் 7 போ் அடங்கிய குழுவை நியமித்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அதுதொடா்பான மனுவை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடா்பாக உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் அருளரசு என்பவா் தாக்கல் செய்த மனுவில், 160 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சூப்பா் எல்நினோ பாதிப்பு தற்போது உருவாகியுள்ளது. அந்த சமயத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைவிட, தற்போது பாதிப்பு கடுமையாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏழை மக்கள் பாதிக்காத வகையில், உணவு தானியங்களை இருப்பு வைப்பது அவசியம். எனவே, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சூப்பா் எல்நினோ பாதிப்புகளைச் சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணா்கள் குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில், எல்நினோ பாதிப்பு குறித்து ஆய்வு செய்யவும், வறட்சி மற்றும் வெள்ள பாதிப்புகளைச் சமாளிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகள் வழங்கவும், நிபுணா்கள் 7 போ் அடங்கிய குழுவை அமைத்து, கடந்த ஜூலை மாதமே உத்தரவு பிறப்பித்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மனுதாரரின் கோரிக்கை ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ளது எனக் கூறி, வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.