போஸ்டரை பார்த்து வாகனத்தை நிறுத்திய விஜய்! சிறுமிக்கு உதவுவதாக உறுதி!
கோவையில் ஆருத்ரா என்ற சிறுமிக்கு கண்டிப்பாக உதவுவதாக முதல்வர் விஜய் உறுதியளித்தது குறித்து...
சிறுமி ஆருத்ராவுக்கு உதவுவதாக முதல்வர் விஜய் உறுதி
கோவையில் சிறுமிக்கு உதவிகோரிய பெற்றோரிடம் கண்டிப்பாக உதவுவதாக முதல்வர் விஜய் உறுதியளித்தார்.
கோவையில் பெரியார் அறிவுலகம் திறப்பு விழா உள்பட அரசு நலத்திட்டங்களையும் முதல்வர் விஜய் இன்று தொடக்கி வைக்கிறார். மேலும், கோவையில் முதல்வர் விஜய் சாலை வலமும் மேற்கொண்டார்.
முதல்வர் விஜய்யின் சாலை வலத்தின்போது ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிலையில், ஆருத்ரா என்ற சிறுமிக்கு உதவிகோரி அவரது பெற்றோர் பதாகை ஏந்தி முதல்வர் விஜய்யின் சாலை வலத்தில் பங்கேற்றிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஆருத்ராவின் பெற்றோரிடமிருந்து பதாகையைப் பெற்றுக்கொண்ட முதல்வர் விஜய், பதாகையின் பின்னே அவர்களின் மொபைல் எண்ணையும் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு உதவுவதாக சைகையில் உறுதியளித்தார்.
பெரியார் அறிவுலகம்! திறந்து வைப்பதில் என்ன பெருமை, உருவாக்குவதில்தான் உண்மையான பெருமை: மு.க.ஸ்டாலின்
Summary
CM Vijay assures help to the young girl Arudhra
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

