‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

போதைப்பொருள் விவகாரம்: தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி பூபாலன், கட்சியில் இருந்து நீக்கம்.

drug

போதைப்பொருள் - கோப்புப்படம்

Updated On :

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகி பூபாலன், அந்தக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினத்தில் தவெக நிர்வாகி பூபாலன் வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் பூபாலன் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், தவெக கட்சித் தலைமை பூபாலனை, அந்தக் கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. இது தொடர்பாக, தவெக கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

நாகை மாவட்டச் செயற்குழு உறுப்பினராகச் செயல்பட்டு வந்த திருப்பூண்டியைச் சேர்ந்த வழக்குரைஞர் பூபாலன் மீது உயர்ரக போதைப் பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில், அவரது வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள், மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு உளவுத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, இன்று (அக். 16) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தவெகவின் கண்ணியம், நற்பெயர் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாட்டிற்கு முற்றிலும் முரணாகச் செயல்பட்டதன் காரணமாக, பூபாலன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்கப்படுகிறார்.

இனி வரும் காலங்களில் அவருக்கும் நமது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனவே, நாகை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் யாரும் அவருடன் கட்சி ரீதியாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

TVK functionary Boopalan, who was arrested in a drug case, has been expelled from the party.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.